சிதம்பரம் ஜாமின் வழக்கு அமலாக்கத்துறைக்கு,'நோட்டீஸ்'

Updated : நவ 21, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 சிதம்பரம், ஜாமின் வழக்கு, அமலாக்கத்துறைக்கு,'நோட்டீஸ்'

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா, சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஜாமின் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, அமலாகத்துறைக்கு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம், ஆகஸ்ட் மாதம், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.தற்போது அவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.சிதம்பரத்துக்கு, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம், ஜாமின் அளிக்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சிதம்பரம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி பானுமதி தலைமையில், போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.சிதம்பரம் ஜாமின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிதம்பரம் மனு தொடர்பாக, 25ம் தேதிக்குள், பதில் மனு தாக்கல் செய்யவதாக உறுதியளித்தார்.இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை, 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
21-நவ-201916:58:10 IST Report Abuse
kurinjikilan இவருக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது..இவரால் பயனடைந்த சிலர் அங்கு கோலொச்சுகின்றனர்..
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
21-நவ-201910:15:18 IST Report Abuse
natarajan s என்ன லேசுல வெளிய விடமாட்டீங்களா அவரை. மீண்டும் மீண்டும் நோட்டீஸ் போட்டு விளக்கம் கேட்டு பின் வாதாடி, என்னமோ பார்த்து செய்ங்க . என்ன ஒன்று எவ்வளவு கேட்டாலும் வாயை திறமாட்டார் , திறந்தால் மாட்டுவது அவரது எஜமானிதான் என்று அவருக்கு தெரியும்.இவர் வசூல் சக்ரவர்த்திதான் அதனாலதான் அவர்களும் அடக்கி வாசிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-நவ-201908:22:40 IST Report Abuse
RajanRajan வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை எனும் கானம் தமிழகம் சார்பில் ஒழிக்க வாழ்த்துவோமாக. அந்த காலத்தில் திரையுலக பானுமதியின் கானங்கள் சித்திரமாய் ஒலிக்கின்றதே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X