பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட வயது தடையில்லை!: இளமை துள்ளும் 86 வயது முதியவர் உற்சாகம்

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019
Advertisement

''விளையாட்டிற்கு வயது தடையில்லை; ஆரோக்கியமாக இருந்தால், எந்த வயதிலும், விளையாட்டு துறையில் சாதிக்கலாம்,'' என்கிறார், 86 வயது முதியவர் வேலு.வட்டு, குண்டு மற்றும் சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளில், அசத்தி வரும் அனர், மும்பையில் உள்ள, தனியார் கெமிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.ராமாபுரம், ஏஞ்சல் தெருவில் வசிக்கிறார். இவருக்கு, சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் உண்டு. திருமணத்திற்கு பின், குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழலால், பணி ஓய்வுக்கு பின், ‛சென்னை மாவட்ட முதியோர் விளையாட்டு கழகம்' என்ற அமைப்பில் உறுப்பினராக இணைந்தார்.


இந்த அமைப்பில், வட்டு, சங்கிலி குண்டு மற்றும் குண்டு எறிதல் ஆகியவற்றில் பயிற்சி பெற்று, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறார். வாரந்தோறும், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில், கிழக்கு தாம்பரம், ரயில்வே மைதானத்திலும், மற்ற நாட்களில், வீட்டின் அருகே உள்ள மைதானத்திலும், நண்பர்களுடன் சேர்ந்து, இவர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

ரயில்வே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரிடம் நாம் பேசினோர். அவர் கூறியதாவது: என் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், தெற்கு கள்ளிகுளம். சிறுவயது முதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்ததால், 1955- -1959ல், அண்ணாமலை பல்கலையில், பி.இ., படித்துக் கொண்டிருந்த போதே, கல்லுாரி விளையாட்டு அணி கேப்டனாக இருந்தேன். கல்லுாரி முடித்து, வேலை, திருமணம் என, வாழ்க்கை மாறியதால், விளையாட்டுகளில் கவனம் செலுத்த முடியவில்லை.


என்னுடைய, 72வது வயதில், அதாவது, 2006ல் மீண்டும் விளையாட பயிற்சி பெற துவங்கினேன். சென்னை மாவட்ட முதியோர் விளையாட்டு கழகத்தில் இணைந்து, பயிற்சி பெற்று, அந்த அமைப்பின் சார்பில் நடந்த, மாவட்ட, மாநில விளையாட்டு போட்டிகளில் வென்றேன்.கடந்த, 2016ல் மைசூரில் நடந்த, தேசிய அளவிலான, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், சங்கிலி குண்டு எறிதல் போட்டியில், தங்கமும், குண்டு எறிதலில் வெண்கலமும் வென்றேன்.

2017ல், ஐதராபாதில் நடந்த தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான, குண்டு எறிதல் போட்டியில் வெண்கலமும், சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளியும் வென்றேன்.2019ல், ஆந்திரா மாநிலம், குண்டூரில் நடந்த தேசிய அளவிலான, 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில், வட்டு எறிதலில், வெள்ளி, சங்கிலி குண்டு எறிதலில் வெள்ளி, குண்டு எறிதலில் வெள்ளி வென்றேன்.

இது தவிர, 2006 முதல் தற்போது வரை, 100க்கும் மேற்பட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, 90க்கும் மேற்பட்ட போட்டிகளில், தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளேன்.என்னுடைய வெற்றிக்கு குடும்பத்தினரின் ஆதரவும், உணவு முறைகளுமே முக்கிய காரணம்.

நேரத்திற்கேற்ப உணவு எடுத்துக் கொள்வதுடன், தினசரி, காலையில் நடைபயிற்சியுடன், விளையாட்டுக்களுக்கான பயிற்சியை தவறாமல் எடுத்துக் கொள்வதே, போட்டிகளில் சாதிக்க உதவுகிறது.இன்றைய இளைஞர்கள், ஒரு நாளின் பாதி நேரத்தை, மொபைல் போனிலேயே செலவழிக்கின்றனர். இதனால், உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காத அவர்களுக்கு, சோம்பேறித்தனமும் அதிகரித்துவிடுகிறது.

இதுவே, அவர்கள், 40 வயதிலேயே மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட, பல நோய்களில் பாதிக்க நேரிடுகிறது.இவற்றை தவிர்க்கவும், ஆரோக்கியத்துடன் வாழவும், ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். ஆர்வமில்லாதவர்கள், குறைந்த பட்சம், தினசரி, உடல் மற்றும் நடை பயிற்சிகளையாவது மேற்கொள்ள வேண்டும்.ஒழுக்கம், உடற்பயிற்சிகளுடன், தவறான பழக்கவழக்கங்களை தவிர்த்தால், நாம், 100 வயது வரை நோயின்றி வாழலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X