கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சபரிமலை கோவிலுக்கு தனி சட்டம் : கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : நவ 22, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
சபரிமலை, கோவிலுக்கு, தனி சட்டம்,விரிவான அறிக்கை

புதுடில்லி, :சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்க, தனி சட்டம் இயற்றுமாறு, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பத்தணம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலை, திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், கோவில் நிர்வாகத்தில் உள்ள சிக்கல் களுக்கு தீர்வு காண்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தில், 2011ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, கோவிலை நிர்வகிக்க, தனி சட்டம் இயற்றுவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக, கடந்த ஆகஸ்ட்டில், கேரள அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கவும், பக்தர்களின் நலன் குறித்தும் தனி சட்டம் இயற்றுமாறு, கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது தொடர்பாக, அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்திற்குள், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கேரள அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சபரிமலை கோயிலுக்கு தனி சட்டம் உருவாக்க கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது ஆன பெண்களை அனுமதிப்பது இல்லை. நீண்டகாலமாக இது அமலில் உள்ளது. இதை எதிர்த்து சிலர் வழக்கு போட்டனர். எல்லா பெண்களும் போகலாம் என சென்ற ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து 67 வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளை 7 நீதிபதிகள் குழு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
21-நவ-201904:29:02 IST Report Abuse
blocked user ஐயப்பன் கோவில் மட்டுமல்ல எல்லா இந்துக்கோவில்களிலும் அரசும் நீதிமன்றமும் நாட்டாண்மை செய்வதை விட்டுவிட்டு மற்ற மத வழிபாட்டுத்தலங்களை தங்களது சட்டத்தின் கீழ் கொண்டுவர முயல வேண்டும். குறைந்தபட்சம் நிதி நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X