பொது செய்தி

இந்தியா

முப்படை தலைமை தளபதி யார்?: டிச.,க்குள் தேர்வு செய்ய தீவிரம்

Updated : நவ 22, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி,: முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி என்ற புதிய பதவியை உருவாக்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தாண்டு டிச.,க்குள் புதிய தலைமை தளபதி தேர்வு செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என, முப்படைகள், நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்கென தனித்தனியாக தளபதிகள் உள்ளனர்.
 முப்படை, தலைமை தளபதி ,தேர்வு , பிபின் ராவத், ஓய்வு

புதுடில்லி,: முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி என்ற புதிய பதவியை உருவாக்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தாண்டு டிச.,க்குள் புதிய தலைமை தளபதி தேர்வு செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என, முப்படைகள், நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்கென தனித்தனியாக தளபதிகள் உள்ளனர்.


பரிந்துரை

அவசர கால நடவடிக்கைகள் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும், இவர்கள் தனித் தனியாக அரசுடன் பேச வேண்டிய நிலை உள்ளது.இதை தவிர்த்து, முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி பதவியை உருவாக்க வேண்டும் என்ற வாதம் நீண்ட காலமாக உள்ளது.

கார்கிலில், 1999ல் நடந்த போரைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு ஒன்று, 'முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், தலைமை தளபதி பதவியை உருவாக்க வேண்டும்' என, பரிந்துரை செய்தது.ராணுவம் தொடர்பான பல்வேறு குழுக்களும், இந்தப் பரிந்துரையை வலியுறுத்தின. மத்திய அமைச்சர்கள் குழுவும் அதை ஆமோதித்தது.


ஆலோசகர்

இந்தாண்டு, ஆக., 15ல் டில்லியில் நடந்த சுதந்திர தின விழாவின்போது, 'முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் தலைமை தளபதி பதவி உருவாக்கப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இந்தப் பதவியை உருவாக்குவது தொடர்பாகவும், தலைமை தளபதியின் அதிகாரம் உள்ளிட்டவை குறித்து வரையறை செய்யவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, முப்படை தளபதிகள் உட்பட பலரிடம் ஆலோசனை நடத்தியது. தலைமை தளபதி பதவிக்கான அடிப்படை வரைமுறைகளை இந்தக் குழு உருவாக்கியுள்ளது.

அடுத்த மூன்று வாரங்களுக்குள், இது இறுதி செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், ராணுவத் தளபதியாக உள்ள ஜெனரல் பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஓய்வு



அவர், டிச., 31ல் ஓய்வு பெறுகிறார். அதற்குள் நடைமுறைகளை முடித்து, நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது.அதனால், வரும், 2020 ஜன., 1க்கு முன்பாக, நாட்டின் முதல் தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
21-நவ-201919:21:29 IST Report Abuse
Sampath Kumar அவரு நாம ஜனாதி பதி தானே ? இல்லையா ?
Rate this:
Cancel
21-நவ-201917:02:58 IST Report Abuse
லொடக்கு ஆண்டி எங்கள் னொன்னன் விசை யோசப்பு அல்லது சொடலை தான் தயபதி. இது டுமிழன் இந்த வொலகத்துல கல்லும் மண்ணும் தோண்றுறதுக்கு முன்னாடியே எடுத்த முடிவு.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
21-நவ-201907:04:27 IST Report Abuse
jagan பாகிஸ்தான் மாதிரி ராணுவம் ஆட்சியை கைப்பற்ற ரொம்ப ஈஸி. மூவரும் சம ரேங்க் இருப்பதால் ராணுவ புரட்சி () நடக்கவில்லை இனி அது ரொம்ப சுலபம். ஒருவர் கீழ் மற்றவர்கள். சண்டையே வராது .... மிக மிக தவறானது இந்த தலைமை தளபதி பதவி உண்டாக்குவது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X