நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு... அமல்!  

Updated : நவ 22, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : ''என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்; மதத்தின் அடிப்படையில், யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்,'' என, ராஜ்ய சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். வடகிழக்கு மாநிலமான அசாமில், சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேச மக்களை கண்டறியும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு
நாடு முழுவதும் ,தேசிய குடிமக்கள் பதிவேடு, அமல்!,மத பாகுபாடு கிடையாது,என அமித் ஷா,உறுதி

புதுடில்லி : ''என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்; மதத்தின் அடிப்படையில், யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்,'' என, ராஜ்ய சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேச மக்களை கண்டறியும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது.இதில், 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி, ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதில் அளித்து கூறியதாவது:பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஹிந்துக்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும், மத்திய அரசு அகதிகளாக ஏற்கும். அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்படும்.

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலை பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். ”ஆகஸ்ட் 5 ம்தேதிக்கு பிறகு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. கல்வீச்சு சம்பவங்களும் குறைந்து விட்டன. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் புகுந்துள்ளனர். அதனால் பாதுகாப்பை மனதில் வைத்து அதிகாரிகள் முடிவு எடுக்கிறார்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு முறை, நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும், தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது, சாதாரண செயல்முறைதான்.

இதில், இந்திய குடிமக்களாக இருக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பெறுவார்கள். மதரீதியாகப் பாகுபாடு காட்டப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அசாம் மாநிலத்தில், என்.ஆர்.சி., செயல்படுத்தப்பட்டது. அங்கே, வரைவுப் பட்டியலில், பெயர்கள் விடுபட்ட மக்கள், தீர்ப்பாயத்துக்குச் சென்று முறையிட உரிமை இருக்கிறது.

அசாம் மாநிலம் முழுவதும், தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீர்ப்பாயத்தை அணுகுவதற்கு யாருக்கேனும் பணப்பிரச்சினை இருந்தால், அதற்குரிய செலவை அசாம் அரசு ஏற்று, வழக்கறிஞரையும் ஏற்பாடு செய்யும்.என்.ஆர்.சி.,யில், அனைத்து மதத்தினரும் இடம் பெறுவர். அதற்காகத்தான் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது.இவ்வாறு, அமித் ஷா தெரிவித்தார்.


19 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர்

அசாமில், என்.ஆர்.சி., செயல்படுத்தப்பட்டுஉள்ளதற்கு. அமெரிக்காவின், சர்வதேச மத சுதந்திரத்துக்கான கமிஷன் கவலை தெரிவித்து உள்ளது.இது பற்றி, அந்த கமிஷன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில், என்.ஆர்.சி., செயல்படுத்துப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.இந்த பதிவேடு, மத பாரபட்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில், 19 லட்சம் மக்கள், நாடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


ஊடகங்கள் மீது ராகுல் பாய்ச்சல்ஜார்கண்ட் மாநிலத்தில், 10 ஆயிரம் பழங்குடியினர் மீது, தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப் பட்டு உள்ளதை, ஊடகங்கள் மறைக்கின்றன என, காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அவர் கூறியிருப்பதாவது:

ஜார்க்கண்ட் மாநிலத்தில், அரசின் அடக்குமுறையை எதிர்த்து போராடும், பழங்குடியினத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது, மிக கொடுரமான, தேச துரோக வழக்கை, ஜார்க்கண்ட் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால், இது பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. 'டிவி' சேனல்களும் மவுனம் காக்கின்றன. இதுதான், ஊடக தர்மமா? இவ்வாறு, ராகுல் கூறியுள்ளார்.


'என்.ஆர்.சி.,யை ரத்து செய்யுங்கள்'''அசாமில், இப்போது செயல்படுத்தப்பட்டுள்ள, என்.ஆர்.சி.,யை ரத்து செய்ய வேண்டும்,'' என, மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.அசாமில், முதல்வர் சர்பானந்த சோனேவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா கூறியதாவது:அசாமியில், இப்போது வெளியிடப்பட்டுள்ள, என். ஆர்.சி.யை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதை அசாம் அரசு நிராகரித்துள்ளது.

தேசிய அளவில், 1971ம் ஆண்டை, 'கட் ஆப்' ஆண்டாக வைத்து, என்.ஆர்.சி., தயாரிக்கப்பட வேண்டும். அசாம் அரசிடம் எந்த ஆலோசனையும் பெறாமல், இந்த என்.ஆர்.சி., தயாரிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலைஜம்மு - காஷ்மீர் நிலைமை பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, அமித் ஷா கூறியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் கூட இறக்கவில்லை. கல் வீசும் சம்பவங்கள் குறைந்துவிட்டன. அனைத்து உருது, ஆங்கில செய்தித்தாள்களும் வெளியாகின்றன.

'டிவி' சேனல்கள் செயல்பட்டு வருகின்றன. வங்கி சேவைகளும் முழுமையாக செயல்படு கின்றன. அனைத்து அரசு அலுவலகங்களும், அனைத்து நீதிமன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில், 98.3 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஜம்மு - காஷ்மீரில், இயல்பு வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ், மற்றும் அரிசி போதுமான அளவில் கிடைக்கிறது. 22 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. மருந்துகள் போதுமான அளவில் கிடைக்கின்றன. சுகாதார சேவைகளை நிர்வாகம் கவனித்து வருகிறது.அனைத்து, 'லேண்ட் லைன்'களும் வேலை செய்கின்றன.

இணையதள சேவைகளைப் பொருத்தவரை, ஜம்மு - - -காஷ்மீர் அதிகாரிகளால் தான் முடிவெடுக்க முடியும். காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் உள்ளன. எனவே பாதுகாப்பை மனதில் வைத்து, உள்ளூர் நிர்வாகம், இணையதள சேவைகளை வழங்குவது பற்றி, முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, அமித் ஷா பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
23-நவ-201917:40:59 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து பணம் பெற்ற அனைத்து தலைவர்களையும் இந்தியர்கள் அல்ல என்று அறிவிக்க வேண்டும் , தேச விரோதிகள்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-நவ-201919:24:17 IST Report Abuse
Sampath Kumar குடிமக்கள் தானே தலைவா ரோம்ப பய இருகோம்?/ அதுவும் தமிழ் நாட்டில் அதிகம் அப்புறம் உங்க குஜராத்து
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-நவ-201917:31:54 IST Report Abuse
Endrum Indian வெற்றி வேல் வீரவேல் முதலில் முஸ்லீம் பேகம் மும்தாஜ் ஆளும் மேற்கு வங்காளத்தில் வாருங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X