பொது செய்தி

இந்தியா

'வாட்ஸ் ஆப்' தகவல் திருட்டு: அரசு நிறுவனம் எச்சரிக்கை

Updated : நவ 20, 2019 | Added : நவ 20, 2019
Advertisement
வாட்ஸ் ஆப், தகவல் திருட்டு, அரசு நிறுவனம், எச்சரிக்கை

புதுடில்லி: 'சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில் புகுந்து பயனாளியின் தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது' என, மத்திய அரசு நிறுவனம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தை, உலகெங்கும், 150 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில், 40 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.மத்தியக் கிழக்கு நாடான துருக்கி நிறுவனம் தயாரித்துள்ள, 'பெகாசஸ்' என்ற உளவு மென்பொருள் மூலம், வாட்ஸ் ஆப் பயனாளிகள் குறித்த தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.இதில், இந்தியாவைச் சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்டோரின்விபரங்களும் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், தகவல் திருட்டு தடுப்பு, தகவல் பாதுகாப்புக்கான, 'சர்ட்இன்' எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்புக் குழு என்ற அமைப்பு, புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.





அதில் கூறப்பட்டுள்ளதாவது: யவாட்ஸ் ஆப் சமூக வலைதளத்துக்குள் நுழைந்து, தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, 'எம்பி4' என்ற மென்பொருளை அடிப்படையாக வைத்து பயனாளிக்கு தெரியாமல், அவருடைய தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்தக் குறை சரி செய்யப்படவில்லை.இது போன்ற மென்பொருளின் அடிப்படையில் வரும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தங்களுடைய, 'மொபைல்' போனில், வாட்ஸ் ஆப் செயலியை அவ்வப்போது புதுப்பித்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X