பொது செய்தி

தமிழ்நாடு

தரை மேல் பிறக்க வைத்தான் தண்ணீரில் பிழைக்க வைத்தான்...இன்று மீனவர்கள் தினம்

Added : நவ 20, 2019
Advertisement
 தரை மேல் பிறக்க வைத்தான் தண்ணீரில் பிழைக்க வைத்தான்...இன்று மீனவர்கள் தினம்

கடல் வளம் மற்றும் மீனவர்கள் நலன் பாதுகாக்க வலியுறுத்தி மீனவர்கள் சார்பில் நவ., 21ம் தேதி உலக மீனவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு கடல் தான் வாழ்வாதாரமாக விளங்குகிறது. மீனவர்களின் வாழ்வு முழுவதும் கடலை நம்பியே உள்ளது. மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய கடலுக்கு செல்லும் போது நடுக்கடலில் பல இன்னல்களைசந்திக்கின்றனர்அதற்கு தீர்வு காணும் வகையில் 1997 நவ., 21ல் டில்லியில் நடந்த40 நாடுகளின் மீனவ பிரதிநிதிகள் கூட்டத்தில் இத்தினம் உருவாக்கப்பட்டது.

உலக பொருளாதாரத்துக்குமீனவர்களின் பங்கு முக்கியமானது.ஒருமுறை கடலுக்கு சென்று
மீன்பிடித்து பத்திரமாக மீண்டும் கரை திரும்பவது, ஒவ்வொரு மீனவருக்கும் சவாலான
பயணமாகவே இருக்கும். போதிய உணவு, உறக்கம் இல்லாமல் தொழிலில் ஈடுபடும்போது, சில நேரம் எதிர்பார்த்த மீன்கள் கிடைக்கலாம், இல்லாமலும் போகலாம்.இதுதவிர திடீரென
ஏற்படக்கூடிய வானிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தையும் மீனவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் பொருட்சேதமும் ஏற்படும். கடல் மட்டுமல்ல ஆறு, ஏரி மற்றும் குளங்களிலும்மீன்பிடி தொழில் நடக்கிறது.



2

இந்தியா 7,516 கி.மீ., துார கடற்கரையைக் கொண்டுள்ளது. 2 லட்சம் கி.மீ. துாரத்துக்கு ஆறு
மற்றும் கால்வாய்கள் உள்ளன. நாட்டில் 1950ல்மீன் உற்பத்தி 1.92 லட்சம் டன்னாக இருந்தது. 2007ல் 7.81 லட்சம் டன்னாக உயர்ந்தது.


9

இந்தியாவில் 9 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் கடற்கரையை கொண்டுள்ளன. மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி மையத்தின் 2010 கணக்கின் படி 3,288 மீனவ கிராமங்கள் உள்ளன. 1,511 மீன் இறங்கு தளங்கள் உள்ளன. 8.64 லட்சம் குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X