இலங்கையில் அண்ணன் பிரதமர்; தம்பி அதிபர்!:ஒரே குடும்பத்திடம் ஒட்டு மொத்த அதிகாரம்

Updated : நவ 22, 2019 | Added : நவ 20, 2019 | கருத்துகள் (28+ 33)
Advertisement
 இலங்கை,பார்லி., அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்,கோத்தபயா,அதிகாரம்

கொழும்பு:அண்டை நாடான இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரம சிங்கே அறிவித்தார். அதைத் தொடர்ந்து தன் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை, சமீபத்தில் பதவியேற்ற அதிபர் கோத்தபயா ராஜபக்சே, 70, பிரதமராக அறிவித்தார். இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது.

சமீபத்தில், இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே அபாரமாக வென்றார். அதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, பதவியில் இருந்து விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், புதிய அதிபர் கோத்தபயாவை, நேற்று முன்தினம் இரவு சந்தித்து ரணில் ஆலோசனை நடத்தினார்.நேற்று நாட்டுக்கு ஆற்றிய உரையில், பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்தார்.

அவர் கூறியதாவது:பார்லி.,யில் நமக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இருப்பினும், அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சேவுக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்தனர். அதை ஏற்று என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.அதன்படி, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே, இன்று முறைப்படி விலகுகிறார். இந்நிலையில், நாட்டின் அடுத்தப் பிரதமராக, தன் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே, 74, நியமிக்கப்பட்டார். இதை கோத்தபயா நேற்று அறிவித்தார். மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு, தம்பி கோத்தபயா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

இலங்கை அரசியலில், ராஜபக்சே குடும்பத்தினர் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த, 2005 முதல், 2015 வரை, அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார். அப்போது ராணுவ அமைச்சராக, கோத்தபயா இருந்தார். சபாநாயகராக சமல் ராஜபக்சே இருந்தார். மற்றொரு சகோதரர் பாசில் ராஜபக்சேவும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.இலங்கையின் வரலாற்றில், அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் சகோதரர்கள் இருப்பது, இதுவே முதல் முறையாகும்.

பாசில் மற்றும் சமல் ராஜபக்சேவுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும், ஒரே குடும்பத்தின் கீழ் வர உள்ளது.இம்ரான் அழைப்புஇலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபயா ராஜபக்சேவை, தொலைபேசியில் அழைத்து, பாக்., பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாக்., வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதை, கோத்தபயா ஏற்றுள்ளார்.

கோத்தபயா அதிபர் தேர்தலில் வென்றதும், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடைய சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவுக்கு சென்று, நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள கடிதத்தையும் கொடுத்தார். அதன்படி, வரும், 29ல், கோத்தபயா இந்தியா வருகிறார். அதிபராக பதவியேற்றதும் அவர் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

Advertisement




வாசகர் கருத்து (28+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-நவ-201915:21:17 IST Report Abuse
Sanny அடுத்து ஜெயிலில் இருந்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதூங்க மோசடி வழக்கில் மூன்றுவருட ஜெயில் தண்டனையை அனுபவித்து வந்தார், தேர்தலுக்காக ஜாமீனில் வெளிநாட்டு பயண தடை கண்டிஷனில் இருந்தார். இன்று புதிய ஜனாதிபதியின் உத்தரவுப்படி நீதிமன்றம் வெளிநாட்டுப்பயண தடை நீக்கபட்டது. காரணம் இவர் 29 திகதி இந்தியாவுக்கு மோடிஜியை சந்திக்கவரும் கோட்டாபய ஜனாதிபதியின் ஆலோசகராக வருகிறார். அதாவது ஒரு சிறை கைதியுடன் கோட்டாபய மோடிஜியுடன் பேசுவதுக்கு வருகிறார். இந்தியா விழிப்புடன் இருக்கணும், ஒரு கைதி ராஜாங்க விசாவில், பேச்சுவார்த்தைக்கு இந்தியா வர தடை விதிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-நவ-201915:11:56 IST Report Abuse
Sanny இது ஆரம்பம் மட்டுமே, இன்னும் இருக்கு மற்றைய சகோதரர்கள், அண்ணன் ராஜபக்சேயின் மூன்று ஆண்பிள்ளைகளில் இருவருக்கு, அண்ணன் ராஜபக்சேயின் மனைவிக்கு ( பெண்கள் கலாச்சார அமைச்சு), மற்றும் மாமன் மைத்துனர் எல்லோருக்கும் இருக்கு, அதோடு அவரின் படிக்காத சகாக்கள் (இப்போஜெயிலில் இருக்கிறார்கள்) அதில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதுங்க ஒரு மோசடி வழக்கில் மூன்று வருட ஜெயித்தண்டனை பெற்று ஜெயிலில் இருந்தார், தேர்தலுக்குகாக அவர் ஜாமீனில் வெளியில் வந்தார், வெளிநாட்டு பயணம் தடை அவருக்கு இருந்தது. இன்று புதிய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வெளிநாட்டு ராஜதந்திரி, தூதுவர் பதவி எல்லாம் இருக்கு, அதுவரை அமைதியாக இருங்க.
Rate this:
Share this comment
Cancel
Ravi - Trichy,இந்தியா
21-நவ-201922:15:29 IST Report Abuse
Ravi CM matrum Dy.CM madiri.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X