'ரூ.2,000 நோட்டு சிக்குவது குறைந்தது': நிர்மலா சீதாராமன்

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 'ரூ.2,000 நோட்டு சிக்குவது குறைந்தது':

புதுடில்லி,: "நாட்டில், வருமான வரி சோதனையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்குவது, 43 சதவீதமாக குறைந்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் கூறினார்.ராஜ்யசபாவில், நேற்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:





கடந்த மூன்று நிதியாண்டுகளில், வருமான வரித்துறை சோதனையின்போது, 5 கோடிக்கும் மேலாக கைப்பற்றப்பட்ட ரொக்கம் தொடர்பான விபரங்கள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், உயர் மதிப்புக் கொண்ட, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்படுவது, ஆண்டுக்காண்டு சரிவை சந்தித்து, 43 சதவீதமாக குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி தகவலின் படி, கடந்த ஏப்., 1 முதல், செப்., 30ம் தேதி வரையிலான, ஆறு மாத காலத்தில், 5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில், 95 ஆயிரத்து, 760 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.வங்கி மோசடிகளை தடுப்பதற்காக, செயல்பாட்டில் இல்லாத, 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, நிர்மலாசீதாராமன் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Flair Vision - Mumbai,இந்தியா
25-நவ-201909:34:16 IST Report Abuse
Flair Vision குறையுந்தான் உங்களுடைய கூட்டத்திலே சுத்தி கிட்டு இருந்தா குறையத்தான் செய்யும், ஏனா சிக்காது வரி ஏய்ப்பு என்று கூறி அடுத்தவன் வீட்டுக்கு ஏவிவிட்டால், இப்படித்தான் இருக்கும். ஏதாவது மாற்று அரசு வரும் வெளில அப்ப வரும்
Rate this:
Share this comment
Cancel
K GANDHI - R.s.Mangalam,இந்தியா
21-நவ-201919:33:05 IST Report Abuse
K GANDHI இவ்வளவு ஓபன் ஆவா தெரிவிப்பீங்க 2000 ரூபாய் நோட்டு பூராம் சேர வேண்டிய இடத்துக்கு போயீ சேந்துருச்சுன்னு
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
21-நவ-201910:50:42 IST Report Abuse
pattikkaattaan 2000 ரூபாய் நோட்டுக்கள் யாரிடம் இருக்கவேண்டுமோ அங்கு பத்திரமாக உள்ளது .. அங்கு எந்த ரெய்டும் நடத்தப்படாது .. அது இருக்கட்டும் நாட்டில் எவ்வளவு போலி 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளது என்றாவது கண்டுபுடிக்க முடியுமா ?..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X