சிட் பண்ட் வாடிக்கையாளர்களை பாதுகாக்கவும் முதலீடுகளை முறைப்படுத்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும, சிட்பண்ட் சட்ட திருத்த மசோதா, 2019, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, தனிநபர், நான்கு பேர் வரை பங்குதாரராக இருக்கும் சிட் பண்ட்களின் அதிகபட்ச தொகை, 1 லட்ச ரூபாயிலிருந்து, 3 லட்ச வரை உயர்த்தப்படுகிறது. நிறுவனங்கள் அல்லது நான்குக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் நடத்தும் சிட்பண்ட்களின் அதிகபட்ச தொகை, 6 லட்ச ரூபாயிலிருந்து, 18 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இந்த மசோதா, லோக்சபாவில், நேற்று நிறைவேற்றப்பட்டது,