பொது செய்தி

இந்தியா

தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம்

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (49)
Advertisement
union cabinet, approves, bpcl, privatisation,தனியார் மயம், பாரத் பெட்ரோலியம்,பி.பி.சி.எல்.,

புதுடில்லி: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்.,), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ.,) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) உள்ளிட்ட 5 நிறுவனத்தில், அரசின் வசமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பி.பி.சி.எல்., எஸ்.சி.ஐ., மற்றும் கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ளதால், வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதன்படி, நாட்டின் இரண்டாவது பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், மத்திய அரசின் வசமுள்ள 53.29 சதவீத பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.பி.சி.எல்., முற்றிலும் தனியார் மயமாகும். மேலும் எஸ்.சி.ஐ., நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 63.75 சதவீத பங்குகளில் 53.75 சதவீத பங்குகளையும், கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 54.80 சதவீத பங்குகளில், 30.9 சதவீத பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
22-நவ-201911:02:36 IST Report Abuse
Anandan இவ்வளவு நாளாக பொருளாதாரம் மந்த நிலை இல்லைனு பேச்சு இப்போ அதுதான் காரணமாம் நிறுவங்களை விற்க. இவங்க ஏறுற மேடை எல்லாமே கோணலாகிறதே.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
22-நவ-201907:48:56 IST Report Abuse
jagan விற்பது தான் நல்லது AIR INDIA 52000 கோடி நட்டம், BSNL 32000 கோடி நட்டம் , பெட்ரோல் கம்பெனிகளும் நட்டம்...எல்லாம் மக்கள் வரி பணம் வேஸ்ட்.
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-201918:16:10 IST Report Abuse
Mani Govt employees should have to work hard else they should have to face these kind of consequences.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X