பிரியங்காவுக்கு கட்சிக்குள் வலுக்கிறதா எதிர்ப்பு?

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (33)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லக்னோ : உபி.,யில் மூத்த தலைவர்கள் பலரால் கட்சி பல்வேறு சவால்களை சந்தித்து வருவதால், கட்சியை மாற்றி அமைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா முடிவு செய்துள்ளார்.






இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக முன்னாள் எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள், எம்எல்சி.,க்கள், 2019 லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் உள்ளிட்ட 350 பேருக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. உ.பி., காங்., தலைமை அலுவலகத்தில் பிரியங்கா தலைமையில் இக்கூட்டம் நேற்று (நவ.,20) நடந்தது. ஆனால் இக்கூட்டத்தில் வெறும் 40 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.





பிரியங்கா மீது மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும், இது பற்றி கட்சி தலைவர் சோனியாவிடமும் பலமுறை கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் ஜனநாயகம் இல்லை எனவும், தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் பலர் புலம்பலை தெரிவித்துள்ளனர். கட்சிக்குள் அதிருப்தியாளர்கள் அதிகரித்து வருவதால் கடந்த 15 நாட்களில் மட்டும் 3 முறை ஆலோசனை நடந்துள்ளது.




நவ.,14 முன்னாள் பிரதமர் நேருவுக்கு மரியாதை செலுத்த கூடிய கூட்டத்தின் போதும், பிரியங்காவை முன்னிலைப்படுத்தியே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், காங்., கட்சி ஒன்றும் தனியார் கம்பெனி இல்லை என்றும் மூத்த தலைவர்கள் சிலர் கூறி உள்ளனர். கட்சியை வலுப்படுத்த வயதான தலைவர்களுக்கு பதில், இளம் தலைவர்களை கொண்டு வர பிரியங்கா முயற்சித்து வருகிறார்கள். பிரியங்கா தனிச்சையாக பல முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், அவரை முன்னிலைப்படுத்தியே கட்சி செயல்பாடுகள் பலவும் இருப்பதாகவும் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - chennai,இந்தியா
21-நவ-201919:04:35 IST Report Abuse
Tamilan ஒரு எதிர்ப்பும் கிடையாது ...காங்கிரஸ் மீண்டு வரும்....
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
22-நவ-201900:29:26 IST Report Abuse
Aarkayவரும்.... ஆனா, வராது...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-நவ-201917:02:13 IST Report Abuse
J.V. Iyer சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வார்கள் இந்த குடும்ப அரசியல் வியாதிகள்.
Rate this:
Share this comment
Cancel
sudhanthiran. - chennai,இந்தியா
21-நவ-201914:18:35 IST Report Abuse
sudhanthiran. இப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கை இந்த குடும்பத்துக்கு எப்படி அமைகிறது தெரியுமா? உழைப்பு அய்யா....கடின உழைப்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X