சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ரஷ்யாவின் சூட்கேஸ் ரோபோ!

Added : நவ 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ரஷ்யாவின் சூட்கேஸ் ரோபோ!

அமேசான், கூகுள் என, பல நிறுவனங்கள், ரோபோ ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன. ரஷ்யாவின் இணைய வணிக தளமான, 'யாண்டெக்ஸ்' சும்மா இருக்குமா? அதுவும், 'யாண்டெக்ஸ் ரோவர்' என்ற பெயரில் ஒரு டெலிவரி ரோபோவை, மாஸ்கோ நகரில் வெள்ளோட்டம் பார்த்து வருகிறது.
ஒரு சூட்கேஸ் வடிவில் இருக்கும் ரோவர், தன்னைத் தானே செலுத்தி, சாலைகளில் பயணித்து, யாண்டெக்ஸ் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே பொருட்களை கொண்டுபோய் தந்து விட்டு, திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆம், கூகுளின் வேமோ தானோட்டி கார்களில் உள்ள அதே லிடார் மற்றும் பிற உணரிகள் ரோவரிலும் உள்ளன. எனவே தெருக்களில் தடைகளை சில மீட்டர் தொலைவிலேயே உணர்ந்து, எதனோடும் மோதாமல் செல்லும் திறன் பெற்றது ரோவர்.
வெள்ளோட்டத்தின்போது மட்டும், தொலைவியக்க முறையில் அது சாலையில் பயணிக்கும். சோதனைகள் வெற்றி பெற்றதும், யாண்டெக்ஸ் ரோவர், யாருடைய வழிகாட்டலும் இல்லாமல், தானோட்டி தொழில்நுட்பத்துடன் சாலைகளில் டெலிவரிக்கு கிளம்பிவிடும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
28-நவ-201911:59:38 IST Report Abuse
Vivekanandan Mahalingam தமிழ் நாட்டுக்கு jcb ரோடு என்ஜின் மீன் பாடி வண்டி 2 / 3 சக்கர வண்டி மட்டும் தான் லாயக்கு .
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-நவ-201909:47:45 IST Report Abuse
 nicolethomson ஏற்கனவே நம்மாளுங்க சாலை விதிகளை மதிக்காமல் ஒருவழிப்பாதையிலும் வண்டி ஒட்டி எல்லாத்தையும் திட்டுவானுங்க, இந்த நிலையில் யாண்டெஸ் இந்தியாவில் நினைத்து பார்த்தால்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X