சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆளை மறைக்கும் மாயக் காகிதம்!

Added : நவ 21, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஆளை மறைக்கும் மாயக் காகிதம்!

ஹாரி பாட்டர் படங்களில் வரும், ஆளை அடுத்தவர் கண்ணில் படாமல் மறைக்கும் துணி மிகவும் பிரபலம். ஆனால், இதுவரை அது போன்ற ஒரு தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரவில்லை.

ராணுவம் மற்றும் உளவுத் துறையினருக்கு மிகவும் தேவைப்படக்கூடிய இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க, பல விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆனால், அண்மையில் கனடாவை சேர்ந்த, 'ஹைப்பர் ஸ்டெல்த் பயோடெக்னாலஜி கார்ப்' இத்தொழில்நுட்பத்தை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.

ஒரு பிளாஸ்டிக் காகிதம் போல இருக்கும் இந்த கண்டுபிடிப்பு, மனித உடல் வெளிப்படுத்தும் அகச்சிவப்பு, புற ஊதா மற்றும் வெப்பக் கதிர்களை மறைத்துவிடுகிறது. எனவே இதன் பின்னால் ஒரு மனிதர் நிற்பது, சில அடிகள் தொலைவிலிருந்து பார்ப்பவருக்குக் கூட தெரிவதில்லை.
காகித வடிவில் இருக்கும் இந்த தொழில்நுட்பத்தை ராணுவ வீரர்கள் மறைந்திருந்து தாக்கவும், பீரங்கி போன்ற தளவாடங்களை வானில்.இருந்து பார்த்தால், தெரியாமல் மறைக்கவும் பயன்படுத்த முடியும்.

தங்கள் தொழில்நுட்பத்தை, தவறான ஆசாமிகள் பயன்படுத்தக்கூடும் என்பதால், இப்போதே, இந்தக் காகிதத்தின் பின்னால் இருப்பதைக் காட்டும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியிலும், ஹைப்பர் ஸ்டெல்த் பயோடெக்னாலஜி கார்ப் இறங்கியிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-நவ-201909:51:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பேப்பருக்கு பின்னாடி ஒளிஞ்சா முன்னாடி இருக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்? நாங்க கூட டீக்கடையில் உக்காந்து டீ குடிக்கும் போது கடன் கொடுத்தவன் வர்றான்னு தெரிஞ்சா பேப்பர் படிக்கிற மாதிரி மூஞ்சியை மறைச்சிக்குவோம். இதிலே என்ன விசித்திரம்ன்னு தெரியலை. ஹூம்..
Rate this:
Share this comment
Cancel
தா்மசிந்தனை - chennai,இந்தியா
21-நவ-201920:29:02 IST Report Abuse
தா்மசிந்தனை Chinese stealth cloak என்று கூகுளில் தேடி பாருங்கள் ஏற்கனவே ஆளை அடுத்தவர் கண்ணில் படாமல் மறைக்கும் துணி போன்ற ஒரு தொழில்நுட்பம் சீனாவில் இருக்கிறது நான் எந்த விடியோவை பார்த்திருக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X