ரெய்டுக்கு பயந்து வீசி எறியப்பட்ட பணக்கட்டுகள்

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (47)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா : கோல்கட்டாவில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து, பணக்கட்டுக்களை மாடியில் இருந்து ஒருவர் வீசி எறிந்துள்ளார். சிதறிய ரூபாய் நோட்டுக்களை ஊழியர்கள் பலர் எடுக்கும் வீடியோ வெளியே வைரலாகி வருகிறது.






மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 6வது மாடியில் இருந்து வீசியெறிந்தனர். கட்டுக் கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.





மாடியில் இருந்து பணக்கட்டுகள் வந்து விழுவதும், அதனை மக்களும், கீழ்தளத்தில் பணியில் இருந்த காவலாளிகளும் பொறுக்கி எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அடிப்படையில் பணத்தை வீசி எறிந்தவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
26-நவ-201911:16:39 IST Report Abuse
Kumar periyaar அப்போ இரண்டாயிரம் வந்தால் கருப்பு பணம் வராது என்கிறார் இப்பொழுது பேட்டிகள் தான் குறைத்துவிட்டது காரணம் ஆயிரம் ரூபாயை கட்டுகள் 10 பெட்டியில் வைத்தால் இப்பொழுது 5 பெட்டியில் வைத்து விடலாம் காரணம் 2000 ரூபாயாக இருப்பதால்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-நவ-201916:06:38 IST Report Abuse
Endrum Indian அய்யயோ இது எனக்கு தெரியவே தெரியாது, தெரிந்திருந்தால் அதை பொறுக்கி நாரத சாராத ஊழல் தலைவியிடம் கொடுத்திருப்பேன் பாவம் பணம் இல்லாமல் தவிக்கின்றாள்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-நவ-201904:13:43 IST Report Abuse
skv srinivasankrishnaveni ரெண்டுகளகம் களும் சேர்த்த எல்லாமே கணக்கிலவராத காஸுக்களேதான் நோட்டுகள் தான் ,வெரி=உன் நாலு வெட்டிகல்ச்சட்டைகள் என்றுவாழ்ந்த காமராசர் எங்கே வேலைக்குவேலை புதுவட்டிகளே காட்டும் இந்தகுப்பைகள் எங்கே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X