ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சரண்யா. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வயிற்றில் இருந்து குழந்தையை எடுக்கும் போது, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சரண்யாவிற்கு ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். பிரசவத்தின் போது தவறுதலாக சரண்யாவின் வயிற்றில் ஊசி வைத்து தைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் உச்சிபுளி ஆரம்ப சுகாதார மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜாஸ்தீர் மற்றும் பெண் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.