தெலுங்கானா எம்எல்ஏ.,வின் குடியுரிமை ரத்து

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்எல்ஏ.,வான ரமேஷ் சென்னமானினியின் (Ramesh Chennamaneni) இந்திய குடியுரிமையை ரத்து செய்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், ரமேஷ், ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்றவர். அவர் 2009 ம் ஆண்டு இந்திய குடியுரிமை கேட்டு சம்ர்ப்பித்த விண்ணப்பத்தில் போதிய விபரங்கள் தராமல், முறைகேடாக குடியுரிமை பெற்றுள்ளார். ஓராண்டு விடுமுறையில் இந்தியா வந்த அவர், தகவறான தகவல்களை அளித்து இந்திய குடியுரிமையை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, உண்மைகளை தவறாக சித்தரித்தல், உண்மை ஆவணங்களை மறைத்தல் மற்றும் மோசடி செய்து குடியுரிமை பெற்றது ஆகியவற்றின் அடிப்படையில் அவரது குடியுரிமை பறிக்கப்பட்டதாக 13 பக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





2009 ம் ஆண்டு முதல் எம்எல்ஏ.,வாக இருக்கும் ரமேஷின் குடியுரிமை தொடர்பான வழக்கை ஏற்கனவே விசாரித்த தெலுங்கானா ஐகோர்ட், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதுனை கருத்தில் கொள்ளாத உள்துறை அமைச்சகம் ரமேஷின் குடியுரிமையை மீண்டும் ரத்து செய்தள்ளது. குடியுரிமை தொடர்பாக இதற்கு முன் 2017 ல் ரமேஷ், உள்துறை அமைச்சகத்தை அணுகிய போது, இவரது கோரிக்கையை ஏற்க உள்துறை அமைச்சகம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-நவ-201917:25:24 IST Report Abuse
Endrum Indian appo சட்டு புட்டுன்னு தினகரன், அன்டோனியோ மைனோ , ராவுல் வின்சியையும் இப்படியே செய்யுங்க Quick Quick No further delay please.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai,இந்தியா
21-நவ-201913:57:11 IST Report Abuse
Balaji நாட்ட வித்துட்டானுங்க போல.. கொறஞ்சது இப்பவாவது உண்மை வெளிக்கி வருதே.. 2009 லோ யாரெல்லாம் ஒதவுனங்களோ எம்புட்டு கொடுத்தாரோ... எண்டே கர்த்தாவே. RBI கோவெர்னர் ஆ இருந்த ரகுராம் ராஜன் அமெரிக்க குடிமகனாமே.. ஹ்ம்ம்ம்
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
21-நவ-201913:42:19 IST Report Abuse
Gopi இதுல என்னங்க விஷேஷம் நேபாள் நாட்டை சேர்ந்தவரையே MP ஆக்கி அழகு பார்த்த கட்சி கான் க்ராஸ் கட்சி. வெளிநாட்டு ஆளுங்கள்னாலே அவங்களுக்கு அலாதிப்பிரியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X