இந்த செய்தியை கேட்க
மும்பை : டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பு மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான கேள்வி பதிலளித்த ராவத் கூறுகையில், ஆட்சி அமைக்கும் பணிகள் துவங்கி விட்டது. இந்த பணிகள் டிசம்பர் 1 ம் தேதிக்கு முன் நிறைவடையும். ஆட்சி அமைப்பது தொடர்பாக 3 கட்சிகளும் மும்பையில் ஆலோசிக்க உள்ளோம் என்றார். காங்., - தேசியவாத காங்., சிவசேனா இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு விட்டதால், சிவசேனா தலைமையில் அடுத்த வாரம் ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் பதவியில் தேசியவாத காங்., கட்சியும் பங்கு கேட்டுள்ளதாகவும், அதை சிவசேனாவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இத பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அடுத்த 2 நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதே போன்று மகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய துறைகள் யாருக்கு என்பது பற்றியும் 3 கட்சிகளும் பேசி வருவதால், இன்னும் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.