அரசியல் செய்தி

தமிழ்நாடு

விருப்பமனு கட்டணம் : திரும்ப தருகிறது அதிமுக

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (14)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் நேரடி தேர்தல் இல்லாத பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள், அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.






உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. இந்நிலையில், மேயர், நகராட்சி, மாநகராட்சி பதவிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக பொதுக் குழு முடிந்த பிறகு நவ.,25 முதல் 29 வரை, தாங்கள் செலுத்திய கட்டண ரசிதை காட்டி, கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விருப்ப மனுக்களுடன் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் இந்த முறையும் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
21-நவ-201919:04:01 IST Report Abuse
Sampath Kumar அப்ப இந்த தேர்தல் கோவிந்த கோவிந்த கோவிந்த
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
21-நவ-201917:15:09 IST Report Abuse
Rengaraj மறைமுக தேர்தலை விரும்பாமல் கட்சிகள் கண்டிப்பாக நீதி மன்றம் செல்லும் என்று தெரிந்தே நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம். நீதி மன்றம் சென்றால் வழக்கு இழுத்தடிக்கப்படும் என்பதும் இந்த அரசுக்கு தெரிந்ததே. இது கட்சிக்கும் நல்லது என்று நினைத்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-நவ-201913:55:16 IST Report Abuse
ezhumalaiyaan என்ன அநியாயம். உங்க பாட்டுக்கு நீங்க திருப்பி கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டீர்கள். எங்க ஆட்களும் கேட்பார்கள். நாங்கள் வாங்கியதை திருப்பிக் கொடுக்கும் பழக்கம் இல்லாதவர்கள் ஆச்சே( மைண்ட் வாய்ஸ்)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X