பொது செய்தி

இந்தியா

முல்லை பெரியாறு பாதுகாப்பாக உள்ளது: மத்திய அரசு

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக பார்லி.,யில் பேசிய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.



latest tamil news



முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவின் இடுக்கி தொகுதி எம்.பி., டீன் குரியகோஸ் லோக்சபாவில், முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
அப்போது பதிலளித்த ஜேந்திரசிங் ஷெகாவத், முல்லை பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்றார். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்பது கேரள அரசின் நீண்ட கால குற்றச்சாட்டாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



தொடர்ந்து விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பம்பை-அச்சன்கோவில்-வைப்பாறு இணைப்பு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-201923:45:27 IST Report Abuse
ஆப்பு உடையர வரைக்கும் நல்லா ஸ்ட்ராங்காதான் இருக்கும். சாவுற வரைக்கும் உயிரோடதான் இருப்பாங்க.
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
21-நவ-201918:28:12 IST Report Abuse
Palanisamy T படித்தவர்கள் அதிகமாகவுள்ள மாநிலமென்றப் பெருமை கேரளாவிற்குண்டு அன்று இந்தியா வந்த அதிபர் பில் கிளிண்டன் இதையேதான் அன்றுச் சொன்னார் இருந்தும் இவர்கள் அடிக்கடி தேவையில்லாமல் அணைக்கட்டின் பாதுகாப்புப் பற்றி கேள்வியெழுப்புவது அவர்களின் மரியாதையை அவர்களே குறைத்துக் கொள்கின்றனர். அணைக் கட்டப் பட்டது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கூற்றுப் படிப் பார்த்தால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்ட எல்லாக் கட்டிடங்களையும் மத்திய அரசு சோதனைச் செய்ய வேண்டியிருக்கும். இனிமேல் இவர்கள் அணைப் பாதுகாப்பு விஷயத்தில் எப்படி நடந்துக் கொள்ளவேண்டுமென்று அவர்களே முடிவுச் செய்யட்டும்.
Rate this:
Cancel
வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்
21-நவ-201918:21:18 IST Report Abuse
வெண்பச்சை வேந்தன் இதைப்போல பேச முடிவெடுக்க ஒரு ஆண்மையுள்ள அரசு வேண்டும் . அது கண்டிப்பாக மோடி அரசாகத்தான் இருக்கும். கேரளாவில் கர்நாடகாவில் ஓட்டு வங்கி இருந்தாலும் தமிழகத்தில் பூஜ்யமாக இருந்தாலும் ஞாயமுடன் நடக்க மோடி அரசால் மட்டுமே முடியும் .காங்கிரஸ் ஆண்டால் இந்த நாட்டின் பிரச்சினைகள் இன்னும்100 ஆண்டுகள் ஆனாலும் தீராது. மேலும் பல 100 பிரிச்சினகள் வந்துகொண்டே இருக்கும்.மோடி ஆட்சியே சாலச்சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X