புதுடில்லி: காஷ்மீர் விவகாரம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட அலிகார் முஸ்லிம் பல்கலை., பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த பல்கலை.,யில் மக்கள் தொடர்பு துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் ஹீயூமாபர்வின் 34. இவரது கணவர் நயூம் காஷ்மீரை சேர்ந்தவர். அங்கு அவர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றுகிறார்.
சில நாட்களுக்கு முன் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் குறித்து ஒரு கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். " சந்திரயானாக இருந்தாலும் , காஷ்மீராக இருந்தாலும் தொடர்பை இழந்தது வலி தரும் விஷயம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து இந்து மகாசபா அசோக் பாண்டே போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரில் ஹீயூமா பர்வினின் கடந்தகால பதிவையும் சான்றாக அளித்தார். குறிப்பாக " டாய்லெட்டை மனதில் வைக்கும் சிலர் காஷ்மீரை என்கவுன்டர் தலமாக கருதுகின்றனர்" . இது போன்ற கருத்துக்கள் காஷ்மீர் இந்தியாவின் உள்ளடங்கிய பகுதி அல்ல என்றும் , பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் உள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறி இருந்தார்.
இதனையடுத்து காந்திபார்க் போலீசார் பேராசிரியர் மீது 153-A , (பகைமை உணர்வை ஊக்குவித்தல்) 505 (2) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.