பொது செய்தி

இந்தியா

அயோத்தி கோயிலுக்கு ரூ.500 கோடி : முகேஷ் அம்பானி பற்றி போலி செய்தி

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரூ.500 கோடி நன்கொடை அளித்ததாக போலி செய்தி ஒன்று, போட்டோவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்காக முகேஷ் அம்பானி ரூ.500 கோடி நன்கொடை அளித்ததாக செய்தி சமூக

புதுடில்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரூ.500 கோடி நன்கொடை அளித்ததாக போலி செய்தி ஒன்று, போட்டோவுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.latest tamil newsஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்காக முகேஷ் அம்பானி ரூ.500 கோடி நன்கொடை அளித்ததாக செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்காக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, பூங்கொத்து கொடுத்து முகேஷ் அம்பானி சந்தித்தது போன்ற போட்டோ ஒன்றும் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பரவி வருகிறது. இந்த போட்டோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த போது அது போலி என்பது தெரிய வந்தது.


latest tamil news2017 ம் ஆண்டு உ.பி.,யில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது யோகி ஆத்யநாத்தை, முகேஷ் அம்பானி சந்தித்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவும் அதே நாளில் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போட்டோவும் அப்போது செய்தி இணையதளங்களில் பதிவிடப்பட்டது. இந்த போட்டோ வைரலானதை அடுத்து பலரும் முகேஷ் அம்பானியின் குடும்ப போட்டோவை பதிவிட்டு, பாராட்டு தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ஒரு பில்லியன் ரூபாய் நன்கொடை அளித்ததாகவும் எழுதி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-நவ-201900:06:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஹா.. ஹா.. கஞ்ச மகாபிரபு..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
21-நவ-201919:19:51 IST Report Abuse
J.Isaac நெருப்பு இல்லாமல் புகையாது. இந்த பணத்தை , ஆதரவற்ற ஏழைகள் அனாதைகள் முதியோர் தொழுநோயாளிகள் பார்வையற்றோர் மனநோயாளிகள் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்தால் புண்ணியமாயிருக்கும்
Rate this:
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
22-நவ-201903:33:23 IST Report Abuse
Kunjumaniநல்ல யோசனை. கிறிஸ்து ராசாவின் ரத்தம், பரமண்டலத்தில் இருக்கும் பராமபிதாவால் முடியாததை அம்பானி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது அம்பானி கிறிஸ்து ராசா மற்றும் பரமண்டலத்தில் இருக்கும் பராமபிதாவை விட பெரியவர் என்பதாலா?...
Rate this:
Ivan - ,
22-நவ-201906:06:27 IST Report Abuse
Ivan, unga mosque la kanji ku vangura kaasa anathai kolanthaingaluku koduka sollunga...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-நவ-201918:56:56 IST Report Abuse
Sampath Kumar அப்படி கிளப்பிவிட்டு மகாராஜன் யாரு ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X