கனடா அமைச்சரான முதல் தமிழ் இந்துப்பெண் அனிதா

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (56)
Advertisement

இந்த செய்தியை கேட்க

டொரன்டோ : ஓக்வில் தொகுதி எம்.பி.,யான அனிதா ஆனந்த், கனடா அமைச்சரவையில் பொதுசேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனடா அமைச்சரவையில் இடம்பெறும் முதல் இந்துப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது கூடுதல் தகவல்.





கனடாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில், முதல் இந்து அமைச்சராக நியமிக்கப்பட்ட பெண்ணாக தனது பெயரை அவர் பதிவு செய்தார். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணிபுரிந்த இவர், நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். எனினும் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள வேலூரை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை ஒரு டாக்டர். பெயர் சுந்தரம் விவேகானந்தன்.





நான்கு குழந்தைகளுக்கு தாயான அனிதா, ஓக்வில் பிராந்தியத்தில் உள்ள இந்தோ-கனடிய சமூகத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். மேலும் கனடிய இந்து நாகரிக அருங்காட்சியகத்தின் முந்தைய தலைவராகவும் இருந்தார். பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட ஏர் இந்தியா 182 விமானம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கான ஆய்வுகளையும் இவர் மேற்கொண்டார்.
புதிய ட்ரூடோ அரசாங்கத்திற்கான அமைச்சரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் அனிதா ஆனந்த்தும் ஒருவர். இவர் தவிர மேலும் 3 இந்தியர்கள் கனடிய அமைச்சர்களாவர். இதில் அனிதா மட்டுமே இந்து. மற்ற அனைவரும் சீக்கியர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
22-நவ-201909:55:31 IST Report Abuse
ganapati sb கனடா தேர்தலில் நின்று வென்ற நமது தமிழகத்தை சேர்ந்த இந்து சகோதரி அனிதாவிற்கு பாராட்டுக்கள். கிடைத்த அமைச்சர் பதவியில் அனைத்து கனடா மக்களும் பாராட்டும் படி சிறப்பாக நேர்மையாக செயல்பட்டு எதிர்காலத்தில் சிங்கப்பூர் நாதன் போல கனடா பிரதமராகவோ அதிபராகவோ வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
22-நவ-201904:38:59 IST Report Abuse
Rajavel இப்படி ஒரு மதம் சார்ந்து தலைப்பிட்டு எழுத வெட்கப்படவேண்டும்
Rate this:
Share this comment
Subramaniam - Prague,செக் குடியரசு
22-நவ-201907:21:53 IST Report Abuse
Subramaniamஇந்து என்று சொல்லிக்கொண்டதில் உனக்கென்ன வலி...
Rate this:
Share this comment
Cancel
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
22-நவ-201904:16:09 IST Report Abuse
tamizha tamizha .... என் போயி விட்டீர்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X