சிதம்பரத்திடம் விசாரணை: அமலாக்கத்துறைக்கு அனுமதி

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் 2 நாள் விசாரணை நடத்த டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் ஆகஸ்ட் மாதம், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்துக்கு, சி.பி.ஐ.,
ஐ.என்.எக்ஸ்., ஐஎன்எக்ஸ், முறைகேடு,  சிதம்பரம், ப.சிதம்பரம், அமலாக்கத்துறை,  சுப்ரீம் கோர்ட்,  உச்சநீதிமன்றம்,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் 2 நாள் விசாரணை நடத்த டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் ஆகஸ்ட் மாதம், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்துக்கு, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டில்லி ஐகோர்ட் ஜாமின் அளிக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, டில்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த கோர்ட், சிதம்பரத்திடம், நாளை (நவ.,22) மற்றும் நாளை மறுநாள் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-நவ-201921:47:17 IST Report Abuse
Natarajan Ramanathan அடிச்சுகூட கேளுங்கள். அப்போதும் ஒன்றுமே சொல்லாது. Norcotics test is the only solution.(OR) BETTER LEAVE HIM TO ME.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-நவ-201920:16:34 IST Report Abuse
RajanRajan கிங்க்பின் ஐ அத்தனை எளிதில் வழிக்கு கொண்டுவர முடியாது. இது பனங்காட்டு குள்ளநரி. நார்கோ டெஸ்ட் ஓன்று தான் இங்கு மார்க்கம். ஏனெனில் இந்த ஊழல் பேர்வழிக்கு அவிங்க ஆட்சி காலத்து ஊழல்கள் யார்யார் ஏவுளவு பண்ணினாங்க எனும் அத்தனை விபரத்திற்கும் இவன் தான் துருப்பு சீட்டு. இவனுடைய குற்றப்பின்னணியை கண்டு பிடித்து நாட்டு மக்களின் வரி பண நஷ்டத்தை ஈடு கட்ட வைச்சு ஜனநாயகம் எப்படி பட்டது எனும் பாடம் புகட்டுங்கள் ஜுட்ஜ் சாமிகளா.
Rate this:
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-நவ-201919:19:15 IST Report Abuse
ezhumalaiyaan 90 நாட்களுக்கு மேலாக அரசாங்க செலவில் விருந்தினராக இருக்கிறார்.Body trimming charges ம் கிடையாது.அதிர்ஷ்டக்காரர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X