சென்னை: சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை, எழும்பூர் கண் மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் கட்டடங்களை கட்ட, அங்குள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு தடை கேட்டு, எழும்பூரை சேர்ந்த கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், 75 மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்ததுடன், தற்போதுள்ள மரங்களை பாதிப்பில்லாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்புகள் உள்ளதா என பதிலளிக்க, மருத்துவமனை நிர்வாகம், பொதுப்பணித்துறை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE