அரசியல் செய்தி

தமிழ்நாடு

2021ல் தமிழக அரசியலில் அற்புதம் நடக்கும்: ரஜினி உறுதி

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (120)
Advertisement
தமிழக அரசியல், ரஜினி, ரஜினிகாந்த்,கமல், கமல்ஹாசன்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: ''தமிழக மக்கள், வரும், 2021ல், அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நுாற்றுக்கு நுாறு சதவீதம் நிகழ்த்துவர்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:கோவாவில் நடந்த விழாவில், 'கோல்டன் ஐகான்' என்ற, விருது வாங்கியதில் மகிழ்ச்சி. அந்த விருது வாங்கியதற்கு, தமிழக மக்கள் தான் காரணம். இந்த விருதை, தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.நானும், கமலும் இணைந்து செயல்படுவது என்பது, தேர்தல் நேரத்தில், அப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய முடிவு. அதிலும், நான் கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சி உறுப்பினர்களை கலந்து பேசிய பின், எடுக்க வேண்டிய முடிவு. எங்களில் யார், முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து, இப்போது கருத்து கூற விரும்பவில்லை.


தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட தயார் என, ரஜினியும், கமலும் ஒரே நேரத்தில் அறிவித்தது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
தமிழக மக்கள், வரும், 2021ல், அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நுாற்றுக்கு நுாறு சதவீதம் நிகழ்த்துவர். இவ்வாறு, ரஜினி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
22-நவ-201909:45:06 IST Report Abuse
ganapati sb தமிழகத்தில் இந்து மதத்தை மட்டும் அவதூறு செய்யும் நாத்திக திராவிட ஊழல் பெருச்சாளிகளுக்கு மாற்று அணைத்து சமுதாயத்தையும் ஆன்மிகத்தில் ஒன்றாக பார்க்கும் நேர்மையான ஆத்திக ரஜினி கட்சியே
Rate this:
Share this comment
Cancel
பொய்த்தவம் புரியும் பூனை - மாமல்லபுரம் ,இந்தியா
22-நவ-201908:24:53 IST Report Abuse
பொய்த்தவம் புரியும் பூனை ""நினைப்பதெல்லாம் நடந்திருந்தால் நடிப்பதில்அர்த்தமில்லை நடந்ததையே நடித்து விட்டால் படிப்பு பொருத்தமில்லை தொடரந்த கதை முடிவதில்லை தமிழர் தூக்கத்திலே முடிந்தகதை தொடர்வதிலே அமிழும் துக்கத்திலே ஆயிரம் வழிகள் அருகில் அதில் அற்புதமென்றே வருகில் யாரோ வரலாம் எதுவும் தரலாம் வருவதும் போவதும் விருந்தல்ல ஒருவர் மட்டும் உளத்திருக்க உதிப்பது என்றும் நிலைத்திருக்கும் ஒன்றிருக்க ஒன்று வந்தால் குதிப்பது உதிர்ந்திருமே"" தூங்கப்போகுமுன் ரஜினி அற்புதம் நடக்கப்போவதாக கூறிய செய்தியைப் படித்ததால் கண்ட கனவுமன்னிக்க
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-நவ-201904:58:53 IST Report Abuse
skv srinivasankrishnaveni ராசிகள் என்ற கேணையங்கள் உள்ளவரை தமிழா உந்தலைவிதி நாசமாதான் போவும் இவணுக்களெல்லாம் ழுங்காவேதமிழ்கூடபேசமாட்டங்க EPS என்னபேசுவது விளங்குதா என்றும் ஆப்ஸ் பேச்சுலே வளவரா ஆர் எம்ஜி ஆர் ரொம்பவே தெளிவாக பேசினாரா?ஜெயாவின் பேச்சிலே கம்பீரம் இருக்கும் சாரம் ஜீரோ முக தமிழோடவிளையாடுவாரு சுடாலின் பேசினால் ஒருஇலவும் விளங்களே அவங்கப்பிள்ளையோ சுத்தம் நெல்லுப்பத்தாயம் லே சிக்கிண்டமூஞ்சூறுபோல பேசுறாங்க ,எவன் பேசினாலும் பேச்சு தெளிவாக பாமரனுக்கும் விளங்குவதுபோல தெளிவாக இருக்கவேண்டும் நம்ம மோடிஜி பேசுவதுபோல ஆங்கில மோ ஹிந்தியோ எவ்ளோஅழகா பேசுறாங்க யாருக்காண்டா அவர் திறமைக்கு தமிழ் தெலுங்க கன்னடம்கூட காத்துண்டு பேசிடுவாருங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X