ஜெர்மனியில் சீக்கியர்களை உளவு பார்த்த இந்திய தம்பதி

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (12)
Advertisement
Indian Couple,Germany, Spying,Sikhs, Kashmiris, இந்திய தம்பதி, ஜெர்மனி, சீக்கியர்கள், காஷ்மீரிகள், உளவு,

பெர்லின்: ஜெர்மனியில் வசிக்கும் சீக்கியர்கள், காஷ்மீரிகளை உளவு பார்த்ததாக இந்திய தம்பதி மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீதான தண்டனை, நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

இந்தியாவை சேர்ந்த மன்மோகன்(50), அவரது மனைவி கன்வல் ஜித் (51) ஆகியோர் உளவு பார்த்ததாக, ஜெர்மனி தனிநபர் சட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராங்க்பர்ட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து வெளியான அறிக்கையில், 2015 ஜனவரி முதல், சீக்கியர்கள், காஷ்மீரிகள் குறித்த தகவல்களை மன்மோகன் சேகரித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். 2017 ஜூலை முதல் டிச., வரை நடந்த இந்திய உளவுத்துறை அதிகாரியை, மன்மோகன் சந்தித்த போது, அவரது மனைவியும் உடன் இருந்தார். உளவு பார்த்ததற்காக, இந்த தம்பதிக்கு 7,200 யூரோக்கள் பணம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், '' ஜெர்மனியில் வசிக்கும் சீக்கியர்கள், காஷ்மீரிகள் நடமாட்டம், அவர்கள் உறவினர்கள் குறித்து, இந்திய உளவுத்துறை அதிகாரியிடம் தகவல் அளித்தேன் என மன்மோகன் ஒப்பு கொண்டார்'' என தெரிவித்துள்ளது.

ஐரோப்பா கண்டத்தில், பிரிட்டன் மற்றும் இத்தாலிக்கு அடுத்து, ஜெர்மனியில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருவது, அந்நாடு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
23-நவ-201906:26:07 IST Report Abuse
Milirvan 1947 இல் மேற்கு கிழக்கு பக்கி'தேசத்தில் 18 சதத்திற்கும் மேலாக இருந்த சிறுபான்மை இனஹிந்துக்கள் அழித்தொழிக்கப்பட்டு க்ஷீணித்து விட்டார்கள்.. இங்கும் 90 க்கும் மேல் இருந்த சனாதனிகளின் தேசம் அமைந்திருந்தால் இன்று பாரதம் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறைந்திருக்கும்.. பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பிரிவு மக்கள் ஒரு செழிப்பான பகுதியை தமது என்று சாசனம் செய்து கொள்வார்களாம்.. பெரும்பான்மை பிரிவு மாத்திரம் பாக்கி நிலத்தை மாற்றோன் சிலுமிஷம் செய்ய ஏதுவாக பொதுவில் வைக்க வேண்டுமாம்.. நம்முடைய மிக தாராள ஜனநாயக சட்டத்தை பயன்படுத்தி உள்/வெளிநாட்டு விஷமிகள் இந்தியத்தையே சிதைக்க முயல்கின்றனர்.. மற்ற நாடுகளுக்கு பாரதத்தின் அளவிற்கு உள்நாட்டு விஷமிகள் கிடையாது..இச்சூழ்நிலையில் பாரதத்தின் உளவுத்துறை மிக முக்கியம்.. முளையிலே கிள்ளுவது போன்றது உளவுத்துறையின் செயல்பாடுகள்.. அன்றேல் கோடாலி கொண்டு வெட்ட வேண்டிய அளவிற்கு செலவு மிக்க ராணுவ நடவடிக்கை தேவைப்படும்.. செலவின் அடிப்படையிலும், பயன்கள் அடிப்படையிலும் உளவுத்துறையில் செய்யும் மூலதனம் பயன் மிக்கது.. ஜப்பான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகள் பொருளாதார, அரசியல், ராணுவ உளவுத்துறை பிரிவுகளின் செயல்பாடுகளின் மூலம் அடைந்த முன்னேற்றம்/பாதுகாப்பு அளப்பரியது.. ஆக, உளவுத்துறை செயல்பாடும் /செலவும் பயன் மிக்கது.. இன்று ஜெர்மனியில் உளவு பார்த்தவர்களை அந்நாடு சட்டத்தின் முன் நிறுத்துவதை போல்... நம் நாட்டிலும்... வெளிநாட்டு பணத்தைக்கொண்டு வெறும் உளவுத்தனம் மட்டுமல்ல, சதிவேலைகளிலும் மதம் பரப்பிகள்/சிறுப்பாண்மைகள் என்று கூறி, நமது மிக தாராள சட்டங்களை பயன்படுத்தி, நம் வேரிலேயே வெந்நீர் பாய்ச்சுபவர்களை கடும் சட்டம் மற்றும் நடைமுறைகளை கொண்டு அடக்க வேண்டும்.. உளவுத்துறையும் ஈடுபடுத்தப்பட வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-நவ-201923:33:54 IST Report Abuse
தமிழ்வேல் 7,200 யூரோக்கள் இன்றயை ரேட்டிற்கு 5,61 600 ரூபாய் ஆகிறது.. இதில் இந்தியா ஏதாவது லாபம் பார்த்ததா என்று தெரியவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
21-நவ-201923:25:22 IST Report Abuse
சமத்துவம் இந்தியாவில் வெளிநாட்டவரிடம் காசு வாங்கி மத மாற்றம் செய்பவரையும் இதன் அடிப்படையில் கைது செய்ய வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X