பெர்லின்: ஜெர்மனியில் வசிக்கும் சீக்கியர்கள், காஷ்மீரிகளை உளவு பார்த்ததாக இந்திய தம்பதி மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீதான தண்டனை, நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
இந்தியாவை சேர்ந்த மன்மோகன்(50), அவரது மனைவி கன்வல் ஜித் (51) ஆகியோர் உளவு பார்த்ததாக, ஜெர்மனி தனிநபர் சட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராங்க்பர்ட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து வெளியான அறிக்கையில், 2015 ஜனவரி முதல், சீக்கியர்கள், காஷ்மீரிகள் குறித்த தகவல்களை மன்மோகன் சேகரித்து இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார். 2017 ஜூலை முதல் டிச., வரை நடந்த இந்திய உளவுத்துறை அதிகாரியை, மன்மோகன் சந்தித்த போது, அவரது மனைவியும் உடன் இருந்தார். உளவு பார்த்ததற்காக, இந்த தம்பதிக்கு 7,200 யூரோக்கள் பணம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், '' ஜெர்மனியில் வசிக்கும் சீக்கியர்கள், காஷ்மீரிகள் நடமாட்டம், அவர்கள் உறவினர்கள் குறித்து, இந்திய உளவுத்துறை அதிகாரியிடம் தகவல் அளித்தேன் என மன்மோகன் ஒப்பு கொண்டார்'' என தெரிவித்துள்ளது.
ஐரோப்பா கண்டத்தில், பிரிட்டன் மற்றும் இத்தாலிக்கு அடுத்து, ஜெர்மனியில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருவது, அந்நாடு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE