எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கினால் தலையை வெட்டுவோம்: சிவசேனா எம்.எல்.ஏ.,

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (57)
Advertisement
Shiv Sena MLA',Poachers, சிவசேனா, எம்.எல்.ஏ.,

மும்பை: '' எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குபவர்களின் தலையை வெட்டுவோம். கால்களை உடைப்போம்'' என சிவசேனா கட்சி எம்.எல்.ஏ., அப்துல் சதார் மிரட்டல் விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறது. டிச., முதல் வாரத்திற்குள் ஆட்சி அமைப்போம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடன், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., இழுக்கலாம் என்ற அச்சத்தில், சிவசேனா கட்சி, தங்கள் எம்.எல்.ஏ.,க்களை மும்பையில் உள்ள சொகுசு விடுதியிலும், காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.,க்களை ராஜஸ்தானில் தங்க வைத்தது. ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டை, பா.ஜ., நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், சிவசேனா கட்சி எம்.எல்.ஏ., அப்துல் சதார் அளித்த பேட்டியில்: ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்டவர்களை விலைக்கு வாங்குவதும், கடத்தி செல்வதும் சட்ட விரோதம். எங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களை விற்க, நாங்கள் ஒன்றும் வணிக கடை நடத்தவில்லை. எங்கள் எம்.எல்.ஏ.,க்களை கடத்தவோ , விலைக்கு வாங்கவோ முயற்சி செய்தால், அவர்களின் தலையை வெட்டுவோம். அவர்களின் காலை உடைப்போம். பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு, ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-நவ-201909:50:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பேருக்கேத்தா மாறி என்னாமா அந்தர் பல்டி அடிக்குது பாருங்க. நேத்தி வரைக்கும் கட்டிப்புடிச்சி கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க. இப்ப கட்டி பொரண்டு பெராண்டிக்கிறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-நவ-201906:08:58 IST Report Abuse
Indhuindian This is the true colour of Siva Sena as propogated by its founder Bal Thakarey. personally witnessed the atrocities of these goondas in seventies in Bombay (as Mumbai was then known), it is no surprise that they are returning to their fundamental principles. Only difference is at that time it was South Indians in particular Tamils whom they called "Madrasis" with their dhotis in half mast, now it is anyone against their party.
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
22-நவ-201905:28:58 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan 1964 -69 ல் கன்னடர்களையும் தமிழர்களையும் மலையாளிகளைyum விரட்டி விரட்டி பயமுறுத்திய குண்டர் கும்பல் தானே இது.ஒரு சில பேரை அவர்கள் கொன்றதும் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X