பொது செய்தி

தமிழ்நாடு

மோடி வெளிநாட்டு பயண விமான செலவு ரூ.255 கோடி

Added : நவ 21, 2019
Share
Advertisement
புதுடில்லி: கடந்த மூன்றாடுகளில் பிரதமர் மோடியின் வெளி நாட்டு பயணத்தின் போது விமான கட்டண செலவாக ரூ.255 கோடி செலவிடப்பட்டுள்ளது.தற்போது பார்லிமென்ட்டின் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகள் குறித்து எதிர்கட்சியினர் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும்

புதுடில்லி: கடந்த மூன்றாடுகளில் பிரதமர் மோடியின் வெளி நாட்டு பயணத்தின் போது விமான கட்டண செலவாக ரூ.255 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தற்போது பார்லிமென்ட்டின் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகள் குறித்து எதிர்கட்சியினர் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் நேரடியாகவும் எழுத்து பூர்வமாகவும் பதில் அளித்து வருகின்றனர்.



latest tamil news




அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டிற்கு சென்றதற்கான பயண செலவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்து பூர்வமாக ராஜ்யசபாவில் பதில் அளித்து உள்ளார்.


latest tamil news


அதன் படி கடந்த மூன்று ஆண்டுகளில் விமான கட்டணமாக ரூ.255 கோடி செலவிட்டு இருப்பதாகவும், 2016-17 ல் 76.27 கோடி ரூபாய், 2017-18 ல் 99.32 கோடி ரூபாய், 2018-19 ல் ரூ.79.91 கோடி,அளவிற்கு செலவிட்டு இருப்பதாகவும், 2019-20 ம் ஆண்டிற்கான பில் தொகை பெறப்பட வில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X