சென்னை: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா திற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. பாத்திமா தந்தை, தனது மகள் மரணம் தொடர்பான ஆதாரங்களை போலீசார் அழிக்க முயற்சிக்கின்றனர் என கூறியுள்ளார். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. அல்லது தனி விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.