பொது செய்தி

இந்தியா

விண்டீஸ் தொடர் : இந்திய அணி அறிவிப்பு

Added : நவ 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
விண்டீஸ் தொடர் : இந்திய அணி அறிவிப்பு

கோல்கட்டா: இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று 'டுவென்டி-20' (டிச. 6, 8, 11), மூன்று ஒருநாள் போட்டிகள் (டிச. 15, 18, 22) கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணி கோல்கட்டாவில் அறிவிக்கப்பட்டது.

'டுவென்டி-20' தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 2 ஆண்டுகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடைசியாக 2017ல் கிங்ஸ்டனில் நடந்த விண்டீசுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படவில்லை. 'டுவென்டி-20' அணியில் கேதவ் ஜாதவ் நீக்கப்பட்டு தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநள் போட்டி அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால், குல்தீப் யாதவ், தீபக் சகார், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.

'டுவென்டி-20' அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சகால், குல்தீப் யாதவ், தீபக் சகார், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
22-நவ-201900:12:19 IST Report Abuse
Aarkay விஜய் சங்கரை மறந்தே விட்டார்களா? தினேஷ் கார்த்திக் அம்போவா? அஸ்வின் என்ன white ball cricket ஆடமாட்டேன் என்றா சொன்னார்? இந்த கேள்விகளுக்கு விடை எங்கு கிடைக்கும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X