பொது செய்தி

இந்தியா

ஏழைகள் பசியை போக்கும் நாராயண சேவை

Added : நவ 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஏழைகள் பசியை போக்கும் நாராயண சேவை

பெங்களூரு: அனைத்து அமைப்புகளிலும் புனிதமானதாக இருக்கும் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள், ஒரு சிறப்பு சின்னமாக உள்ளது. சத்ய சாயின் பெயரை கொண்டுள்ள சின்னம், அவரது பணியை எடுத்து செல்வதில், அவர் தேர்ந்தெடுத்த நிறுவனமாக இருக்க வேண்டிய பொறுப்பு உலகளவில் உள்ளது.

சத்யசாய் பாபாவின் எதிர்பார்ப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு பொருந்தும் வகையில், ஸ்ரீசத்ய சாய் சேவை அமைப்பு, கடந்த பல ஆண்டுகளாக, சத்யசாய் உச்சரித்த பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த கொள்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரசாந்தி நிலையத்தில் நடந்த ஆன்மிக மாநாடானது, மிகுந்த ஊக்கம் அளித்ததுடன், பெரிய திட்டங்கள் மூலம் பலரிடம் சென்றடைந்தது.
இந்த முயற்சிகளை தொடர்ந்து, 'நாராயணா சேவை' என்ற கருத்தை மையமாக கொண்டு, ஏழைகளுக்கும் உணவளிக்கும் திட்டத்தை ஸ்ரீசத்யசாய் சேவை அமைப்பு துவங்கியுள்ளது.

இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைப்பின் அகில இந்திய தலைவர் ஸ்ரீ நிமிஷ் பாண்டியா கூறியதாவது: நாராயண சேவை நிகழ்ச்சி ஏழைகளுக்கு உணவு அளிப்பது மட்டும் அல்ல. மாறாக, தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமுதாய முயற்சி. இது தனிநபரிடம் இருந்து குடும்பத்திற்கும், பின்னர் சமூகத்திற்கும் மாறும் பரிணாம வளர்ச்சி. ஒவ்வொரு பணியும், சொந்த நலனுக்காகவும், சுய விருப்பத்திற்காகவும் செய்யப்படுகிறது. நாம் சாய் பக்தர்கள் அல்லது சாய் மையங்களை சேர்ந்தவர்கள் என சொல்வது மட்டும் போதாது. ஆனால், பயிற்சி என்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் இலக்கில் இருந்து சற்று விலகியிருக்கலாம். ஆனால், பக்தர்கள் ஆன்மிக அர்த்தங்களை கொண்ட புனிதத்தை உறுதிப்படுத்த செயல்பாட்டின் சாராம்சத்தில் பக்தர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில், நாராயண சேவையில் ஈடுபடும் போது, ஏழை மக்களுக்குள் இருக்கும் கடவுளுக்கு சேவை செய்கிறோம். உருவமற்ற கடவுள், சோகத்தில் இருக்கும் ஏழைகளின் வடிவத்தை எடுக்கிறார் என சத்யசாய்பாபா கூறுவார். இந்த வாய்பை வழங்கிய சத்யசாயிக்கு நன்றி தெரிவிப்பதுடன், உலகில் எந்த உயிரினமும் பசியுடன் இருகக்கக்கூடாது என இந்த நேரத்தில் உறுதி எடுத்து கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்ரீசத்யசாயி மருத்துவ அறிவியல் அமைப்பின் மூத்த மேலாளர் டிவி சந்திரசேகர், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.இதன் பின்னர் ஸ்ரீசத்ய சாயின் சஹஸ்ர்சன நாமாவலியின் லட்சார்சனை நடந்தது. பஜனைகளுக்கு பின்னர் மங்கல ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
25-நவ-201906:19:53 IST Report Abuse
kalyanasundaram HOW ABOUT PAYMENT OF STATUTORY CHARGES TO GOVT. AND PENDING CASES AGAINST HIM . PEOPLE MAY READ MORE ABOUT THIS ANOTHER SO CALLED GOD MAN ON RELEVANT TOPICS IN NET.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-நவ-201919:12:43 IST Report Abuse
Sampath Kumar விளம்பரம் தான் முக்கியம் அமைச்சரே
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-நவ-201916:27:53 IST Report Abuse
இந்தியன் kumar ஏழைகளுக்கு உணவு கொடுப்பது இறைவன் மிக்க மகிழ்ச்சி அடைவார்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-201901:52:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்திங்குற கூட்டத்தில் 99.99999% ஏழையே இல்லை. நல்லா வெள்ளையும் சொள்ளையுமா இருக்குற கூட்டம். இங்கே செஞ்சிருக்குற ஆடம்பரம், படாடோபம், ஆரவாரம் அனைத்துக்கும் ஆனா செலவில் மட்டும் லட்சம் உண்மையான ஏழைகளுக்கு ஒருவேளை உணவை நிச்சயமாக கொடுத்திருக்கலாம். இதெல்லாம் தெய்வீகம் இல்லை. வக்கிரம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X