ஜம்மு - காஷ்மீரில் நீடிக்கும் கட்டுப்பாடுகள் : தெளிவு படுத்த சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

Updated : நவ 23, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ஜம்மு - காஷ்மீர், நீடிக்கும், கட்டுப்பாடுகள்,தெளிவு படுத்த,சுப்ரீம் கோர்ட்,கண்டிப்பு

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள விவகாரம் குறித்து, கேட்கப்படும் கேள்வி ஒவ்வொன்றுக்கும், தனித்தனியாக பதில் அளிக்க வேண்டும்' என, யூனியன் பிரதேச நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, ஆகஸ்ட், 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அக்., 31ல், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு - காஷ்மீரில், வன்முறை, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

முன்னாள் முதல்வர்கள் உட்பட, 400க்கும் அதிகமான அரசியல் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கிடையில், ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


இணைய சேவை



இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த விசாரணையின் போது, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், பெரும்பாலும் தளர்த்தப்பட்டுவிட்டன. கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிப்பதாக, மனுதாரர்கள் தெரிவித்துஉள்ளது சரியல்ல.

'லேண்ட்லைன்' தொலைபேசி இணைப்புகள், முழுமையாக வழங்கப்பட்டுவிட்டன. இணைய சேவை வழங்குவது பற்றி, மாநில நிர்வாகம் முடிவெடுக்கும். மாநிலத்தில், பள்ளி, கல்லுாரிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, துஷார் மேத்தா கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் எந்தெந்த வகையில் பாதிப்புள்ளது என, விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், விரிவான தகவல்கள் இல்லை.அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி ஒன்றொன்றுக்கும், தனித்தனியாக பதில் வேண்டும். பொதுவாக, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன; இயல்புநிலை திரும்புகிறது என கூறுவது ஏற்புடையதல்ல.


விசாரணை



ஜம்மு - காஷ்மீரில், கைது செய்யப்பட்டவர்கள் பற்றி, நாங்கள் எந்த விசாரணையும் நடத்த வில்லை. கட்டுப்பாடுகளை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை மட்டும் விசாரிக்கறோம். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''ஜம்மு - காஷ்மீர் நிலைமை, நாளுக்கு நாள் மாறுகிறது. அதனால், அங்குள்ள நிலைமை குறித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறேன். இது தொடர்பாக விசாரணை நடக்கும் போது, மனுதாரர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
22-நவ-201909:06:16 IST Report Abuse
Darmavan அரசு கோர்ட்டின் ஏவலாள் இல்லை. மக்கள் அரசுக்குத்தான் அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள் அன்றி கோர்ட்டுக்கு அல்ல.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-நவ-201908:09:22 IST Report Abuse
RajanRajan கஸ்மீரில் பயங்கரவாதம் தலையேடுக்காமல் இருக்க உத்தரவவாதம் அளிக்கும் வகையில் என்னென்ன நடைமுறைகள் அமல் படுத்த வேண்டும் என விபரமாக கோர்ட்டே உத்தரவு பிறப்பியுங்களேன். பார்க்கலாமே நிலைமை எப்படி மாறும் என்று
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-நவ-201904:11:46 IST Report Abuse
blocked user நீதிமன்றம் ஆட்சியில் பங்கு பெறுவது கேவலம். நீதிபரிபாலனம் நிர்வாகத்தை முடக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
22-நவ-201909:04:49 IST Report Abuse
Darmavanஅரசு தன் அதிகாரத்தை காட்ட வேண்டும் .கோர்ட் வரம்பு மீறல்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X