காஷ்மீர் பிரச்னை நீடித்ததற்கு காங். காரணம்

Updated : நவ 23, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 காஷ்மீர், பிரச்னை,நீடித்ததற்கு,காங்.,காரணம்

மானிகா: ''அயோத்தி மற்றும் காஷ்மீர் பிரச்னைகள் இவ்வளவு ஆண்டுகளாக நீடித்ததற்கு, காங்கிரஸ் தான் காரணம்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 30ல் துவங்கி, ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மானிகா உள்ளிட்ட இடங்களில், நேற்று பேசியதாவது:

காஷ்மீர் பிரச்னை, 70 ஆண்டுகளாக நீடித்து வந்தது. அதேபோல், அயோத்தி வழக்கும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த இரண்டு பிரச்னைக்குமே காங்கிரஸ் தான் காரணம். சிறுபான்மையினர் ஓட்டுகளை பெறுவதற்காக, இந்த இரண்டு விவகாரத்திற்கும் தீர்வு காணாமல், காங்கிரஸ் இழுத்தடித்தது.

அயோத்தி பிரச்னைக்கு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்பதே, அனைவரது விருப்பம். தற்போது, கடவுள் ராமரின் ஆசிர்வாதத்துடன், அயோத்தியில் ராமர் கோவில் அமைவதற்கான இடையூறுகள் நீங்கியுள்ளன. அதேபோல், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம், பிரதமர் மோடி, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி உள்ளார்; காஷ்மீரின் வளர்ச்சிக்கும் வழி வகுத்துள்ளார்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh - Chennai,இந்தியா
22-நவ-201920:56:53 IST Report Abuse
Ganesh Kashmir problem will be solved, But Economic crisis is in very bad situation, Say something about it. You couldn't solve the problem, day by day it worsens. How many days you will sing same song Kashmir Kashmir.
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201911:36:56 IST Report Abuse
கொத்து பரோட்டா கோவிந்து உங்கள் கருத்து முற்றிலும் உண்மை மிஸ்டர் சந்தான பாரதி ..அதற்க்காகத்தான் உங்களை ஆட்சியில் அமர்த்தினோம் ..இப்போது பாராட்டுகிறோம் ..
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
22-நவ-201911:35:21 IST Report Abuse
ganapati sb உண்மை தான் காங்கிரஸ் முஸ்லிம்கள் வாக்குவங்கிக்காக வேண்டுமென்றே பிரச்னையை தீர்க்காமல் காலத்தை கடத்தியது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X