பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்புடன் உள்ளது முல்லைப்பெரியாறு அணை: மத்திய அரசு வலியுறுத்திய அதிரடி உத்தரவாதம்

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019
Share
Advertisement
'முல்லைப்பெரியாறு அணை, அனைத்து அம்சங்களிலும், 100 சதவீதம் முழு பாதுகாப்போடு உள்ளது' என்ற அதிரடி உத்தரவாதத்தை, மத்திய அரசு லோக்சபாவில் ஒரு முறைக்கு இரு முறை தந்துள்ளது.லோக்சபாவில், கேள்வி நேரத்தின் போது, கேரள காங்., - எம்.பி., டீன் குரிய கோஸ், ''மனிதர்களால் கட்டப்படும், எந்தவொரு கட்டடமும், குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பாதுகாப்புடன் இருக்கும்.''அந்த வகையில்,
 பாதுகாப்புடன் உள்ளது முல்லைப்பெரியாறு அணை:  மத்திய அரசு வலியுறுத்திய அதிரடி உத்தரவாதம்

'முல்லைப்பெரியாறு அணை, அனைத்து அம்சங்களிலும், 100 சதவீதம் முழு பாதுகாப்போடு உள்ளது' என்ற அதிரடி உத்தரவாதத்தை, மத்திய அரசு லோக்சபாவில் ஒரு முறைக்கு இரு முறை தந்துள்ளது.

லோக்சபாவில், கேள்வி நேரத்தின் போது, கேரள காங்., - எம்.பி., டீன் குரிய கோஸ், ''மனிதர்களால் கட்டப்படும், எந்தவொரு கட்டடமும், குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பாதுகாப்புடன் இருக்கும்.''

அந்த வகையில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அச்சம் உள்ளது. புதிய அணை கட்டுவதற்கான கோரிக்கை இருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் ஆய்வுக்கான அனுமதியை, மத்திய அரசு வழங்கியுள்ளதா,'' என, கேட்டார்.அதற்கு பதிலளித்த, நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணை, முழு பாதுகாப்பாக உள்ளது. 40 ஆண்டுகளாக, இந்த அச்சம் கிளப்பப்பட்டு வருகிறது.

சுப்ரீம்கோர்ட் உத்தரவின்படி, பாதுகாப்பு குறித்த அம்சங்களை ஆராய, குழுக்கள் அமைக்கப் பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.கடந்த ஜுனில் கூட, ஒரு ஆய்வு நடைபெற்றது. முடிவில், பாதுகாப்பு குறித்து எல்லா அம்சங்களிலும், அணை பலமாகவே இருப்பது தெரிய வந்தது.பாதுகாப்பு அம்சத்தின் ஒரு கட்டமாக, பேபி அணையை மேலும் பலப்படுத்த முயன்ற போது, கேரளா அரசு, ஒத்துழைப்பு தரவில்லை.

கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், பணிகளை மேற்கொள்வது சிரமம். அணை இருப்பதாலேயே, அப்பகுதி முழுவதையும் கேரளா சொந்தம் கொண்டாட நினைப்பது சரியல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கு, கேரள எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட நிலையில், தி.மு.க., - எம்.பி., ராஜா, ஒரு பிரச்னையை கிளப்பினார். அப்போது, அவர் கூறியதாவது:அணை முழு பாதுகாப்பாக இருக்கிறது என, ஒன்றுக்கு இரு முறை, அமைச்சர் கூறுகிறார். கேட்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும், புதிய அணை கட்டும் கோரிக்கை ஏன் வருகிறது. அதற்கு மத்திய அரசு துணைபோவது ஏன்?

சுற்றுச்சூழல் அமைச்சகம் இதில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது புரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கு, கேரள எம்.பி.,க்கள் கொந்தளித்து, அமளியில் இறங்கினர். ஒரு கட்டத்தில், ராஜாவுக்கும், கேரள எம்.பி.,க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

இறுதியாக, ராஜாவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், ''அணை கட்டும் விவகாரம், இரு மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, ஒரு கோரிக்கை வந்தால், அதை பரிசீலிப்பது வழக்கம். ''இருப்பினும், கேரளா மற்றும் தமிழகம் ஒருங்கிணைந்து ஒப்புக் கொண்டால் மட்டுமே, மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்,'' என்றார்.


'தமிழக அரசு தவறிவிட்டது'

லோக்சபாவில், தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் பேசியதாவது:கடந்த, 1892 -- 1933ம் ஆண்டு ஒப்பந்தப்படி, தென்பெண்ணையாற்றின் குறுக்கே, எந்த திட்டத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், கர்நாடகா, ஐந்து திட்டப்பணிகளை மேற்கொள்கிறது. இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தடுப்பணை கட்டுவதை தடுக்க, தமிழக அரசு தவறி விட்டதால், மத்திய அரசாவது தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், நடுவர் மன்றத்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


'வைகை கரை நாகரிகம்'

மதுரை எம்.பி., வெங்கடேசன் பேசியதாவது:மத்திய அரசின், 6 மற்றும் 12 ம் வகுப்பு பாடப் புத்தகங்களில், 'தமிழ் நாகரிகத்தின் காலம், கி.மு., 3ம் நுாற்றாண்டு' என உள்ளது.
கீழடி ஆய்வின்படி, இனி வரும் கல்வியாண்டில், அதை, 'கி.மு., 6ம் நுாற்றாண்டு' என, மாற்ற வேண்டும். தவிர, 'கங்கை கரையில், பெரு நகரங்கள் உருவான அதே கால கட்டத்தில், வைகை கரையிலும், தமிழக நகரங்கள் உருவாகியிருந்தன' என, குறிப்பிட வேண்டும். அதோடு, 'கி.மு., 6ம் நுாற்றாண்டில் உருவான தமிழக நகரங்கள், எழுத்தறிவு பெற்ற நகரங்களாக இருந்தன' என்றும் குறிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X