பொது செய்தி

இந்தியா

21 வயதில் நீதிபதியாகும் இளைஞர்

Added : நவ 21, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், மாயாங்க் பிரதாப் சிங், 21. ராஜஸ்தான் பல்கலையில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்த இவர், ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள்தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து, விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது. இது குறித்து,
 21 வயதில் நீதிபதியாகும் இளைஞர்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், மாயாங்க் பிரதாப் சிங், 21. ராஜஸ்தான் பல்கலையில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்த இவர், ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள்தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து, விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது. இது குறித்து, மாயாங்க் பிரதாப் சிங் கூறியதாவது:தினமும், 13 மணி நேரம் தொடர்ந்து படிப்பேன். என் பெற்றோரும், எனக்கு உதவினர். நீதிபதியாக பணியாற்றுவோருக்கு நேர்மை தான் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வரும் எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல், ஆள் பலம் மற்றும் பண பலத்துக்கு ஆசைப்படாமல், நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ranga - paapaanpuram,இந்தியா
22-நவ-201906:25:06 IST Report Abuse
Ranga நல்ல விஷயம் ஆனால் 12 வருடம் பள்ளி படிப்பு, 5 வருடம் கல்லூரி படிப்பு, குறைத்து ஒரு வருடம் நீதிதுறைத்தேர்வுக்கு படித்திருக்கவேண்டும் அப்படி என்றால் தம்பி 3 வயதில் பள்ளி படிப்பை ஆரம்பித்திருக்கவேண்டும் அப்படி செய்ய முடியுமா? அதை முதலில் ஆராய வேண்டும்..
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
22-நவ-201920:53:37 IST Report Abuse
s.rajagopalanநல்ல கேள்வி எல்லா வகுப்புகளிலும் டபிள் ப்ரோமோஷன் வான்கியிருக்கலாம். ? ஐந்து வயதில் படிப்பை துவங்கியிருந்தால் ...இது நடக்காது என்று சொல்ல முடியாது. ஜீனியஸ்- கள் அவ்வப்போது தோன்றிக்கொண்டிருக்கர்களே ? மேலும் எடுத்த எடுப்பில் உயர் நீதி மன்ற தில் அமர மாட்டார். படிப்படியாகத்தான் இது நடக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X