சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சஸ்பெண்ட்' தலைமை ஆசிரியர் சி.இ.ஓ., அலுவலகத்தில் 'அடம்'

Added : நவ 21, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
திண்டுக்கல், மாறுதல் கலந்தாய்வில் அதிகாரிகள் முன் அழுது புரண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா 54, நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.திண்டுக்கல்லில் நவ.19ல் அரசுப்பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. குஜிலியம்பாறை அய்யப்பட்டியை சேர்ந்த இந்திரா
'சஸ்பெண்ட்' தலைமை ஆசிரியர்  சி.இ.ஓ., அலுவலகத்தில் 'அடம்'

திண்டுக்கல், மாறுதல் கலந்தாய்வில் அதிகாரிகள் முன் அழுது புரண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா 54, நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.திண்டுக்கல்லில் நவ.19ல் அரசுப்பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. குஜிலியம்பாறை அய்யப்பட்டியை சேர்ந்த இந்திரா அய்யம்பாளைம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 3 ஆண்டுகளாக உள்ளார்.கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் முன் தரையில் உருண்டார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.நேற்று முதன்மைக் கல்வி அலுவலகம் வந்த அவர், 'தவறு எதுவும் செய்யவில்லை, சஸ்பெண்ட்' உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பள்ளியில் 2 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அவர்களும் சரியாக வருவது இல்லை. ஒரு கையை துாக்க முடியாமல் சிரமப்படுகிறேன். இடமாறுதல் வழங்க வேண்டும்' என தரையில் அமர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.அவரிடம் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் அமுதா பேச்சுநடத்தினர். அவர் செல்லாததால் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-நவ-201905:31:15 IST Report Abuse
 nicolethomson கொடுமை
Rate this:
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
22-நவ-201913:23:28 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் ஒரு ஆசிரியரை நடத்தும் முறை இதுவல்ல. கண்ணியம் அவசியம். இந்த லட்சணத்தில் பள்ளிகள் நடத்தினால் தான் தனியார் பள்ளிகள் வாழ முடியும். அதற்க்கு அனைத்து அரசு துறையும் நன்றாக வேலை செய்கிறது. இவர்கள் பாவத்துக்கு என்ன தண்டனையோ
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
22-நவ-201908:54:29 IST Report Abuse
Girija குழந்தைகளே இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியை ? அந்த சுற்றுவட்டாரத்தில் ஏழை குழந்தைகளே இல்லையா ? குறைந்தது மதிய உணவிற்க்காக கூட வருவதில்லையா ? ஆச்சிரியம் ?
Rate this:
Gopi - Chennai,இந்தியா
22-நவ-201917:54:42 IST Report Abuse
Gopiஅருகில் உள்ள அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அந்த பள்ளியில் படிக்க வைத்தால் தானே எல்லாம் சரியாகிவிடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X