அரசியல் செய்தி

தமிழ்நாடு

மறைமுக தேர்தலை கொண்டு வந்ததே தி.மு.க.,தான்: முதல்வர்

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
 மறைமுக தேர்தல்,கொண்டு வந்ததே, தி.மு.க.,தான், துாத்துக்குடியில் ,முதல்வர், பேட்டி

துாத்துக்குடி: உள்ளாட்சிகளில் மறைமுக தேர்தலை கொண்டு வந்ததே தி.மு.க.,தான், என முதல்வர் பழனிசாமி துாத்துக்குடியில் தெரிவித்தார்.

தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க நேற்று மாலை துாத்துக்குடி வந்த முதல்வர் பழனிசாமி விமான நிலையத்தில் கூறியதாவது:33 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று தென்காசி புதிய மாவட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. 2021ல் ரஜினி எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என கூறினார் என தெரியவில்லை. 2021லும் அ.தி.மு.க., ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் எனஅவர் கூறியிருக்கலாம்.

ரஜினி, கமல் குறித்து ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றனர். பாராளுமன்ற தேர்தலோடு பா.ஜ.,வுடன் அமைத்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது. 2021ல் நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று அ.தி.மு.க.,வை சேர்ந்தவரே முதல்வராக வருவார்.உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வும் அதன் கூட்டணியும் மகத்தான வெற்றி பெறும்.மறைமுக தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்தியதே 2006ல் தி.மு.க., தான். ஆனால் அதனை ஸ்டாலின் எதிர்ப்பது விந்தையாக உள்ளது.-

2006 ஜூன் மாதத்தில் சட்டசபையில் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், ''அசாம்,குஜராத் போன்ற மாநிலத்தில் மறைமுக தேர்தல் நடக்கிறது. விழுப்புரம், விருதாச்சலம் 2 நகராட்சிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தது. அதனால் தான் மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருந்தால் அது மக்களுக்கு நன்மையளிக்காது,'' என விளக்கியுள்ளார்.

1996 வரை உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் தான் இருந்தது. நேரடி தேர்தலை கொண்டு வந்ததும் தி.மு.க., தான். அதனை தொடர்ந்து மறைமுக தேர்தலை கொண்டுவந்ததும் தி.மு.க., தான். மறைமுக தேர்தல் என ஸ்டாலின் சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் தவறா?.ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளில் நடத்தபடும் மறைமுக தேர்தலை போல மாநகராட்சி, நகராட்சிகளும் தேர்தல் நடத்தப்படும்.

மறைமுக தேர்தலுக்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காலகட்டத்திற்கு ஏற்றார் போல முடிவு எடுக்கவேண்டியுள்ளது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுக தேர்தல் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் சட்டரீதியாக நடக்கிறது.இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-நவ-201907:55:21 IST Report Abuse
ஆரூர் ரங் இப்பிரச்னை திமுகவை எதிர்த்து அல்ல. மேயர் தலைவர் போஸ்ட்களை வேறு கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கினால் கலகத்தொண்டன் வேலை செய்யமாட்டேங்கிறான் .அதுக்காகத்தான்
Rate this:
Cancel
ஹரிஷ் - விழுப்புரம்,இந்தியா
22-நவ-201916:02:35 IST Report Abuse
ஹரிஷ் அவர்கள்தான் திருடர் முன்னேற்ற கழகம் என்றால், இவர்கள் அனைத்தையும் திருடும் முன்னேற்ற கழகமாக அல்லவா இருக்கிறார்கள்.சரி அவர்கள்தான் அப்படி மறைமுக தேர்வு முறையை கொண்டுவந்தார்கள்.உங்கள் அம்மாதான் அதனை மாற்றி அமைத்தார்களே.நீங்கள் உங்கள் அம்மா வழி ஆட்சி நடத்துபவர்கள் ஆயிற்றே, உங்களுக்கேன் இந்த வேலை.இந்த இரண்டு உலக மகா அயோக்கிய காட்சிகளை என்றுதான் மக்கள் புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. இவர்களின் திட்டம் எல்லாம் திருடுவதற்கு, கொள்கை எல்லாம் கொள்ளையடிப்பதற்கு.அவ்வளவுதான்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
22-நவ-201916:00:10 IST Report Abuse
konanki அப்போ நடிகர் உதயநிதி சென்னை மேயர் ஆகணும்ன்னா வார்டு கொன்சிலர் பதவி க்கு நிக்கணுமா ? என்னங்கடா இது பேஜரா பூட்சி ?
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
22-நவ-201920:33:22 IST Report Abuse
தமிழ்வேள்ஹி..ஹி அப்படி இல்லைங்க ...வார்டு கவுன்சிலருக்கு நின்று தோற்றால் என்ன செய்ய? அதனால் கவுன்சிலர்களால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் , ஏதாவது ஒரு அல்லக்கை கவுன்சிலாரை ராஜினாமா செய்யவைத்துவிட்டு உதயநிதி போட்டியிடுவார் அதாவது மேயராக கவுன்சிலர் சீட்டுக்கு நிற்பர் ஜெயிப்பது ஈஸி ..அதுதான் திமுக வழி .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X