தேசிய திறனாய்வு தேர்வு 8,700 பேருக்கு அனுமதி 

Added : நவ 22, 2019
Share
Advertisement

கோவை: தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு எழுத விண்ணப்பித்தோரில், 8,700பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு, வரும், 1ம் தேதி நடக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம், 1.5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பங்கேற்க முடியும். உரிய ஆவணம் சமர்ப்பித்து விண்ணப்பித்த, 8,700பேருக்கு, ஹால்டிக்கெட் விநியோகிக்கப்பட்டது.இவர்களுக்கு, 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 20 பேருக்கு ஒரு அறை கண்காணிப்பாளர் வீதம், 440பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். இத்தேர்வில் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வீதம், பிளஸ் 2 வரை, கல்வி உதவி தொகை வழங்கப்படும். முந்தைய வகுப்பு பாடத்திட்டம் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகளே இடம்பெறுவதால், மாணவர்களைமாதிரி தேர்வு மூலம், தயார்ப்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X