திருவண்ணாமலை திருவண்ணாலை தீப திருவிழாவுக்கு, தீபம் கொப்பரை சீரமைக்கும் பணிகள் துவங்கின.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 1ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10 காலை பரணிதீபம், அன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலைஉச்சியில், மகா தீபம் ஏற்றப்படுகின்றது. இதற்காக, ஆறு அடி உயரமுள்ள கொப்பரை பயன்படுத்தப் படுகின்றது. விழாவையொட்டி, இந்த கொப்பரை சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கின.இது குறித்து கோயில் அதிகாரிகள் கூறியதாவது:திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு மலைஉச்சியில், தீபமேற்றும் கொப்பரையை சீரமைக்கும் பணியில், 10 பேர் ஈடுபட்டுள்ளனர். தீபம் ஏற்றும்போது, வெப்பத்தால் கொப்பரை சேதமாகாமல் இருக்க, மேல்பாகம், 3.75 அடி, கீழ்பாகம், 2.75, அடி சுற்றளவு கொண்ட, 150 கிலோ எடையுள்ள செப்புத்தகடு கொப்பரையை சுற்றி, 20 இரும்பு வளையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கொப்பரையை மலைஉச்சிக்கு எடுத்துச்செல்ல, மேல்பாகம், கீழ்பாகத்தில் தலா நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE