திருப்பூர்: மாவட்டத்தில் உள்ள, ஒன்பது வருவாய் கிராமங்களில், இன்று அம்மா திட்ட முகாம் நடக்கிறது.திருப்பூர் வடக்கில், மண்ணரை வி.ஏ.ஓ., அலுவலகம்; திருப்பூர் தெற்கில், நாச்சிபாளையம் சமுதாயக்கூடம்; அவிநாசியில், காளிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம்; ஊத்துக்குளியில், சுண்டக்காம்பாளையம் கூட்டுறவு சங்கம்; பல்லடத்தில், கரடி வாவி வி.ஏ.ஓ., அலுவலகம்; தாராபுரத்தில், மடத்துப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம்; காங்கயத்தில், வெள்ளகோவில் வி.ஏ.ஓ., அலுவலகம்; உடுமலையில், பெரியகோட்டை வி.ஏ.ஓ., அலுவலகம், மடத்துக்குளத்தில், தாந்தோணி வி.ஏ.ஓ., அலுவலகம் ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம், இன்று நடக்கிறது.பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE