அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது திராவிட மண். .. ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை சொல்கிறார் ஜெயக்குமார்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (61)
Advertisement
இது திராவிட மண். .. ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை சொல்கிறார் ஜெயக்குமார்

நாகர்கோவில்''திராவிட மண்ணில் ஜாதி, ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை'' என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:கன்னியாகுமரி சரக்கு பெட்டக மாற்று முனையத்தை மக்கள் விரும்பவில்லை என்றால் அ.தி.மு.க., அரசு ஆதரிக்காது. மீனவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க எட்டரை கோடி ரூபாயில் 'மரைன் என்போர்ஸ் விங்க்' அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் கடல் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை வரைவு நிலையில் இருக்கலாம். மீனவர்களின் பாதுகாப்பிற்கு அரசு பாதுகாப்பாக இருக்கும். மீன்வளத்துறையில் கேரளத்தை விட தமிழகம் முன்னேறி வருகிறது. தமிழகத்தின் வடக்கு, தெற்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் வெற்றி பெற்றது மட்டுமல்ல, 2021 தேர்தலிலும் தமிழகத்தை ஆளபோகும் கட்சி அ.தி.மு.க., தான். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுப்பது தி.மு.க., தான். தோல்வி பயத்தில் அப்படி செய்கிறார்கள். தினகரன் கட்சியைப் பொறுத்தவரை அது எதுவோ தேய்ந்து கட்டெறும்பான கதை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
23-நவ-201903:50:37 IST Report Abuse
meenakshisundaram அடப்பாவி தெரு தெருவாய் கோவில்களை தமிழ் மன்னர்கள் கட்டியுள்ளனர். திருக்குறள் ,கம்ப ராமாயணம் அரங்கேறிய இடமே கோவில் தான் .ஆன்மிகம் தமிழனின் ரத்தத்திலே உள்ள ஜீவா அணுவாகும்.மேலும் 'மனு' நீதி சோழன் என்றே mannan பட்டம் பெற்றான்.தஞ்சை பெருவுடையார் கோவிலே ஆன்மிகத்தின் சின்னமே ,அப்படி இருக்கையில் இதை திராவிட மண் என்று வகைப்படுத்தி ஏதோ திராவிடம்னா தெய்வ நம்பிக்கையே இல்லாதது என்று தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும் ஜெயக்குமார் போன்றோர் வாயை திறக்காமலிருப்பதே சாலச்சிறந்தது .-எப்பொரு யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-201902:08:32 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மொட்டையடிச்சி, தாடி வளத்து, மண்சோறு துண்ணு, போற வாற கொழந்தைங்களை பிடிச்சு வந்து பலவந்தமா அலகு குத்தி, வகை வகையா வேஷம் போட்டு தமாஷ் பண்ணதே மந்திரிகள் கூட்டம். அதிலே நீயும் தான் இருந்தே. மறந்துட்டியா?
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-நவ-201920:23:04 IST Report Abuse
oce திராவிட மண் தமிழகத்துக்கு மட்டும் உரிய தல்ல. அது ஒட்டு மொத்த இந்தியாவுக்கே சொந்தமானது. அதனால் அதற்கு பரத கண்டம் என்ற பெயரிட்டனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X