பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டவன் கட்டளையால் உருவான தென்காசி தென்காசி மாவட்டம் ஒரு வரலாற்று பார்வை..

Added : நவ 22, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகத்தில் ஒரு புதிய மாவட்டமாக தென்காசி 22ம் தேதி உதயமாகிறது. அதையொட்டி இந்த சிறப்பு கட்டுரை.தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் தென்காசி சுமார் 575 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது.தமிழகத்தின் மிகப்பழமையான மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி.. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என திருஞானசம்பந்தரும் "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும்,
 ஆண்டவன் கட்டளையால் உருவான தென்காசி தென்காசி மாவட்டம் ஒரு வரலாற்று பார்வை..

தமிழகத்தில் ஒரு புதிய மாவட்டமாக தென்காசி 22ம் தேதி உதயமாகிறது. அதையொட்டி இந்த சிறப்பு கட்டுரை.

தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் தென்காசி சுமார் 575 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது.தமிழகத்தின் மிகப்பழமையான மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி.. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என திருஞானசம்பந்தரும் "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய புண்ணிய பூமி, திருநெல்வேலி ஆகும்

பாண்டி நாட்டின் தென்பகுதியே திருநெல்வேலி சீமை. பாண்டியர்கள் இப்பகுதியை ஆண்டதை வரலாறு மெய்பிக்கிறது.சோழப் பேரரசு உருவான காலத்தில் பாண்டியர் அவர்களின் ஆளுகையில் கீழ் இருந்தனர். சோழப்பேரரசை முடிவுக்கு கொண்டு வந்தவன் ஜடவர்ம சுந்தரபாண்டியன். அதன் பின்னர் பாண்டியர்களுக்குள் சண்டை மூண்டதால், மாலிக்காப்பூர் மதுரையைச் போரிட்டு.கைப்பற்றினான். இதன் காரணமாக பாண்டிய மன்னர்களின் சந்ததியினர் மதுரையிலிருந்து, புலம் பெயர்ந்து திருநெல்வேலியை அடைந்து 'நெல்லைப் பாண்டியர்'களாக இருந்து வந்தனர்.
தென்காசி அருகே உள்ள விந்தன்கோட்டையை தலைநகராக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த காலத்தில் காசிக்கு யாத்திரை செல்பவர்கள் வழியிலேயே மடிந்து போயினர். இதற்கு தீர்வு கேட்டு இறைவனை வேண்டினான் பராக்கிரம பாண்டியன். மன்ன்ன் கனவில் வந்த இறைவன் தெற்கே தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கட்டளையிட்டார். அதன்படி . கி.பி.1445 ஆம் ஆண்டில் ஆண்டவன் கட்டளைப்படி உருவானதுதான் காசி விஸ்வநாதர் கோவில் . தெற்கில் அமைந்த காசி என்பதால் இது தென் காசி விஸ்வநாதர் என்று இக்கோவிலுக்கு பெயர் வந்த்து. கூடவே உருவான நகருக்கு தென்காசி என்ற பெயரையே பராக்கிரம பாண்டியன் சூட்டினார். இப்படி ஆண்டவன் கட்டளையால் உருவான இந்த தென்காசி இப்போது மாவட்ட தலைநகராகிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கிழக்கிந்தியக் கம்பெனியர்தான் நாட்டின் பல பகுதிகளிலும் கோலோச்சி வந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியால் 1790 செப்டம்பர் முதல் தேதி திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஆற்காடு நவாப் வசம் இந்த மாவட்டம் இருந்த்தாக சொல்லப்படுகிறது. ஆற்காடு நவாப்பிடமிருந்து பிரிட்டிஷார் இதை கையகப்படுத்தி டின்னவேலி (ஆங்கலேயர் காலத்தில் வெளியான அரசு உத்தரவுகள் அனைத்திலும் இந்தப் பெயரே இடம் பெற்றுள்ளது.) மாவட்டம் என பெயரிட்டனர்.

துவக்கப்பட்ட சில நாட்களிலேயே இம் மாவட்டம் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்தது. முதலில் பாளைங்கோட்டையை தலைமையிடமாக கொண்டு தான் இந்த மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பாளையக்காரர்களுககு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்ற போது பாளையங்கோட்டையைத்தான் பிரிட்டிஷார் தங்களது இராணுவ தலைமையிடமாக வைத்திருந்து செயல்பட்டனர். அதன் பின்னர் திருநெல்வேலி நகரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டதாலும், நாயக்கர் மற்றும் நவாப் ஆட்சிக்காலங்களில் இந் நகரம் திருநெல்வேலி சீமை என அழைக்கப்பட்டதாலும் பின்னர் ”திருநெல்வேலி மாவட்டம்” என்று அழைக்கப்பட்ட்து.

துவக்க கால நெல்லை மாவட்டத்தில் தற்போதைய மதுரை விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன. தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதிக்காக பல்வேறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப் பட்டன. அப்போதே தென்காசியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது..

மக்களின் நலன் கருதியும், அரசின் நிர்வாக வசதிக்காகவும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.. வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பாண்டிய மன்னர்களான அதிவீரராமபாண்டியன், பராக்கிரமபாண்டியன் ஆகியோர் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டுதான் ஆட்சி செய்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளது..

கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தென்காசியை தனி மாவட்டம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி எல்லா வேடபாளர்களாலும் சொல்லப்பட்டது.சுமார் 33 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் அந்தக் கனவு மெய்ப்பட்டுள்ளது. .1986ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி (வ.உ.சிதம்பரனார் பெயரில்) மாவட்டம் உருவானது.

இதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி தென்காசி தனி மாவட்டம் அமையும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார். நவம்பர் 12ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் அமைவது தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசானையை வெளியிட்டது. இது தமிழகத்தில் 34 வதாக உருவான மாவட்டமாகும்.

திருநெல்வேலி மாவட்டம் 6 ஆயிரத்து 823 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதில் சுமார் 3ஆயிரத்து 200 ச.கி.மீ.தென்காசி மாவட்டமாக உருவெடுக்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நெல்லை மாவட்டத்தின் மக்கள்தொகை 30 லட்சத்து 73 ஆயிரம். இதில் புதிதாக உருவாகும் தென்காசி மாவட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் இடம் பெறுகிறார்கள்

தற்போதுள்ள 16 தாலுகாக்களில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, சங்கரன்கோயில் திருவேங்கடம், ஆலங்குளம், வீரகேரளம்புதூர், ஆகியவை தென்காசி மாவட்டத்திலும், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தாலுகாக்கள் இடம் பெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் இருந்த 10 சட்டமன்ற தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில், ஆகிய தொகுதிகள் தென்காசி மாவட்டத்திலும் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய தொகுதிகள் திருநெல்வேலி மாவட்ட்த்திலும் இடம் பெறுகிறது.

சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய முதல்நிலை நகராட்சிகளும், செங்கோட்டை, புளியங்குடி ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள், 9 பஞ்சாயத்து யூனியன்கள், 18 பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள் தென்காசி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு அதில் சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களில் உள்ள 97 கிராமங்கள்., தென்காசி கோட்டத்தில் செங்கோட்டை தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் மற்றும் ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 154 கிராமங்களும் இடம் பெற்றுள்ளது.

ஏற்கெனவே, தென்காசியில் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றுக்கு தனி கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர இன்னும் 50க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் படிப்படியாக தென்காசியில் இடம்பெறும். அடவிநயினார் அணை, கருப்பாநதி, குண்டாறு, ராமநதி மற்றும் கடனாநதி அணை ஆகிய ஐந்து அணைகள் இம் மாவட்ட எல்லைக்குள் அமைகிறது.

புதிய மாவட்டமாக உதயமான பின்னர் பல்வேறு நலத்திட்டங்கள் வளர்ச்சிப்பணிகள் நடக்கும், வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மாவட்ட அளவில் மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி அமையும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு
மாவட்டத்தின் பொருளாதாரத்தில் விவசாயம் தான் பிரதான தொழிலாகும். நெசவு மற்றும் கயிறு, வெல்லம் தயாரித்தல் ஆகியவை அடுத்த கட்ட பிரதான தொழில்களாகும்.

நெல்லுக்கு அடுத்தபடியாக தேங்காய், வெங்காயம், மிளகாய், ஆகிய பணப்பயிர்களே இம் மாவட்ட்த்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. புளியங்குடி மற்றும் கடையம் வட்டாரங்களில் எழுமிச்சை, வாசுதேவநல்லூர் பகுதியில் கரும்பும தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் சங்கரன்கோயில் வட்டங்களில் மிளகாயும்,. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இது தவிர பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தொழில்வளம் எதுவும் இல்லை. செங்கல்., பீடித் தொழில், பாத்திரங்கள் தயாரித்தல் மற்றும் கருப்பட்டி தயாரித்தல் ஆகிய சிறு தொழில்களும் நடந்து வருகிறது.


மாவட்ட்த்தின் ஒரே புகழ் பெற்ற விஷயம் குற்றாலம் மட்டுமே. உலகப்புகழ சுற்றுலாத் தலம் என்பதை தவிர வேறு சிறப்பு எதுவும் இல்லை.. திருநெல்வேலி என்றது நினைவுக்கு வரும் அல்வாவின் பெருமையை சொல்லி தென்காசி கார்ர்கள் பெருமைப்பட முடியாது. அதேசமயம் பார்டர் புரோட்டாவும்,சங்கரன்கோவில் பிரியாணியும் பேமஸ் என்று மார்தட்டிக்கொள்ளலாம்.

கலெக்டர் : நெல்லை மாவட்ட முதல் கலெக்டர் என்ற பெருமையை பெற்றவர் அருண்சுந்தர்தயாளன். தூத்துக்குடியைச் சேர்ந்தவர்.
எஸ்.பி : முதல் எஸ்.பி.என்ற பெருமை சுகுனாசிங்கிற்கு கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே தென்காசியில் ஏ.எஸ்.பி.யாக பணியாறியவர்.

-லோசனன்

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
22-நவ-201917:43:24 IST Report Abuse
LovelyMarees கணபதி அய்யா கோவிலுக்கு சென்றால் நேராக வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும். எனவே முதலில் குற்றாலம் சென்று குளித்துவிட்டு மற்ற அனைத்து அருவிகளிலும் குளித்தபின் குற்றாலநாதரை தரிசித்துவிட்டு நேராக தென்காசி காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு வேறு எங்கும் செல்லாமல் நேராக வீட்டிற்கு செல்லுங்கள். கோவிலுக்கு சென்றுவிட்டு குளிக்க செல்லக்கூடாது.
Rate this:
Cancel
DHARMARAJ - Sankarankovil,இந்தியா
22-நவ-201917:24:46 IST Report Abuse
DHARMARAJ தென்காசி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு புதிய மாவட்டம் அமைப்பது பொருத்தமான ஒன்றுதான். அதர்க்காக தென்காசிக்கு புவியியல் ரீதியாக சம்பந்தமே இல்லாத சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா மக்களை அதனுடன் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. திருநெல்வேலிக்கு அருகிலேயே இருக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகா பகுதிகளை எங்கோ தொலைவில் இருக்கும் தென்காசியுடன் சேர்த்து தங்களின் பழி வாங்கும் திறமையை நிரூபித்து சந்தோசப் படும் அரசியல் புள்ளிகளுக்கு மக்கள் பதில் சொல்லாவிட்டாலும் காலம் பதில் சொல்லும். மேற்கண்ட தாலுகாவை சேர்ந்த மக்களுக்கு ஆட்சியர் அலுவலகம் சென்று வீடு வந்து சேர இரண்டு நாட்கள் வேண்டும். ஒரு மணி நேரத்தில் திருநெல்வேலி சென்று விடும் தூரத்தில் உள்ள மக்களுக்கு இரண்டரை மணி நேர பயணம் என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்குமென்று ஆட்சியாளர்கள் நினைத்திருப்பார்களோ?
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
22-நவ-201916:19:16 IST Report Abuse
ganapati sb இருமுறை குற்றாலம் சென்றும் தென்காசி விஸ்வநாதரை மதியம் மற்றும் இரவில் கடந்தால் தரிசிக்க முடியவில்லை அடுத்த முறை தென் காசி கோயிலுக்கு சென்றபின் குற்றாலம் செல்லவேண்டும் மேலும் குற்றாலம் பராசக்தியின் 51 சக்தி பீடங்களில் ஒன்று என நினைக்கிறேன் தென்னக பகத் சிங் வீர வாஞ்சிநாதன் வாழ்ந்த பகுதி என்பதும் கூடுதல் சிறப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X