'புதுச்சேரியை திருநங்கையாக அறிவித்து விடுங்கள்'

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (58)
Advertisement
Narayanasamy,புதுச்சேரி, திருநங்கை, முதல்வர், நாராயணசாமி, மத்திய அரசு

புதுச்சேரி: ''மாநில அரசுகளுக்கான நிதிக்குழு யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழு என எதிலும் புதுச்சேரியை சேர்க்கவில்லை; எங்களை திருநங்கையாக அறிவித்து விடுங்கள்'' என முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக பேசினார்.

புதுச்சேரியில் 'இந்திய நிதி கூட்டாட்சியில் உள்ள சவால்கள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. சமீபத்தில் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மத்திய அரசின் 15வது நிதிக் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆனால் ஏற்கனவே யூனியன் பிரதேசங்களாக இருந்து வரும் புதுச்சேரி டில்லி அதில் சேர்க்கப்படவில்லை.

மாநில அரசுகளுக்கான நிதிக்குழு யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழு என எதிலும் புதுச்சேரியை சேர்க்கவில்லை. புதுச்சேரிக்கு ஆரம்பத்தில் 70 சதவீதம் மத்திய அரசு நிதி கிடைத்தது. தற்போது 30 சதவீதம் நிதி வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் 26 சதவீதம் மட்டும்தான் கிடைக்கிறது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு 42 சதவீதம் மத்திய அரசு நிதி கிடைக்கிறது.





ஜி.எஸ்.டி. சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வருவாயை பெறும்போது மாநிலமாகவும் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது யூனியன் பிரதேசமாகவும் புதுச்சேரியை மத்திய அரசு கருதுகிறது. எனவே எங்களை திருநங்கையாக மத்திய அரசு அறிவித்து விடலாம். புதுச்சேரி அரசு நிதியில்லாமல் பல்வேறு சிக்கல்களில் தவிக்கிறது. மத்திய அரசிடம் இருந்து போதிய ஆதரவு எங்களுக்கு கிடைக்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
27-நவ-201916:40:38 IST Report Abuse
Endrum Indian சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
25-நவ-201920:30:05 IST Report Abuse
oce அந்த அம்மா கிட்ட சண்டை போட்டே வெக்ஸ் ஆகியிருப்பார். அண்ணன் நாராயணசாமிக்கு ஜே.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
25-நவ-201920:28:07 IST Report Abuse
oce திரு நங்கைகளுக்கு வக்காலத்து வாங்குவோரே. சும்மா ரோடில் மேயரவனெல்லாம் புடவை கட்டிக்கோண்டு கடை கடையாய் போய் நின்னு கை தட்டி துட்டு கேட்பது சரியா. அது அசிங்கமில்லையா. அவன்கள் உடலுழைப்பின்றி உடலை வளர்க்கும் முழு சோம்பேறிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X