சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ! கோவையில் மதபோதகர் கைது

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (122)
Share
Advertisement
கோவை : கோவையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளரான மதபோதகரை, அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், 'புனித மரியன்னை' அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ராமநாதபுரம், புலியகுளத்தை சேர்ந்த மரிய
பள்ளி மாணவி, ஆபாச வீடியோ, கோவை, மதபோதகர், கைது

கோவை : கோவையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளரான மதபோதகரை, அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், 'புனித மரியன்னை' அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ராமநாதபுரம், புலியகுளத்தை சேர்ந்த மரிய ஆண்டனி ராஜ், 55 என்பவர் தாளாளராக உள்ளார். நேற்று முன்தினம்(நவ.,20) பள்ளியில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவிகளை அழைத்த தாளாளர், தனது மொபைல்போனில் சில, 'ஆப்'களை பதிவிறக்கம் செய்து கொடுக்குமாறு தெரிவித்தார். அவரது மொபைல்போனை மாணவிகள் வாங்கி பார்த்தபோது, அதில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. இதை மாணவிகள் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தாளாளர் கொடுத்ததாக தெரிகிறது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் வீட்டுக்கு சென்று தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். கோபமடைந்த பெற்றோர் நேற்று காலை பள்ளி முன் திரண்டனர். பள்ளி தாளாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து மாநகர மத்திய பகுதி சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.


மதபோதகர்:


முதல்கட்ட விசாரணைக்கு பின், மரிய ஆண்டனி தாஸ் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்து விசாரித்தபோது, பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டும் நோக்கில் தாளாளர் செயல்பட்டது, உறுதியானது. இதையடுத்து அவர் மீது ஒரு மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், தாளாளர் மீது, 'போக்சோ' சட்டத்தில் அனைத்து மகளிர் மத்திய பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மரிய ஆண்டனி தாஸ் மதபோதகராகவும் இருந்து வந்தார். இவர் இதற்கு முன், வேறு ஏதேனும் மாணவிகளிடம் இதுபோன்று செயல்களில் நடந்துள்ளாரா என, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil newsசம்பவம் குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, 'அரசு உதவி பெறும் பள்ளி என்பதால், நிர்வாகத்தில் நேரடியாக தலையிட முடியாது. மேலும், அவர், பள்ளி கல்வித்துறையின் கீழ் ஊதியர் பெறும் நபர் அல்ல. உடனடியாக, வேறு தாளாளரை மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (122)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-நவ-201903:48:15 IST Report Abuse
meenakshisundaram ஐயா Madhu மங்கை கூடாதுன்னு காந்தி சொன்னார் ,ஆனா இந்த மாதிரி ஆட்கள் அதே கொளகைன்னு டிமாண்ட் செய்கிறார்களே எப்படியோ இவர் அவிங்களோடே 'நித்தியானந்தா'
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201912:10:37 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  இவன் போட்டோவை பெருசா பிரிண்ட் செஞ்சி அங்கங்க இருக்குற அசிங்கம் புடிச்ச கவுர்மென்ட் கக்கூஸ் சொவத்துல ஓட்டுங்க.. அவனோட பொண்டாட்டி புள்ளைங்க பாத்தா பாவம் அவுகளுக்கு எப்புடி இருக்கும் ?? நம்ம விவேக்க கூப்டு மைனர் குஞ்சுக்கு கொடுத்த தண்டனையை கொடுக்க சொல்லுங்க..
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
24-நவ-201914:38:26 IST Report Abuse
sathyam சர்சைகள் அதிகம் இருப்பதால் அது சர்ச் எனப்படுகிறது . ஓசி குருமா ? சரியா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X