சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புற்றுநோய் பாதித்த கோழி இறைச்சி விற்பனை?

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை: புற்றுநோய் பாதித்த கோழி இறைச்சி விற்கப்படுவதாக, சமூக வலைதளத்தில் வேகமாக பரவும், 'வீடியோ'வால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.சமீபத்தில், சமூக வலைதளங்களில், 'உறவுகள் மற்றும் நண்பர்களுக்கான எச்சரிக்கை பதிவு' என்ற, வாசகங்களுடன், கோழி இறைச்சி குறித்த தகவல் வெளியாகி, வேகமாக பரவுகிறது. அதில், பிராய்லர் கோழிகளுக்கு மருந்துகள் செலுத்தி, 45 நாட்களில் முழு வளர்ச்சி
புற்றுநோய், கோழி, இறைச்சி, விற்பனை?

சென்னை: புற்றுநோய் பாதித்த கோழி இறைச்சி விற்கப்படுவதாக, சமூக வலைதளத்தில் வேகமாக பரவும், 'வீடியோ'வால், பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

சமீபத்தில், சமூக வலைதளங்களில், 'உறவுகள் மற்றும் நண்பர்களுக்கான எச்சரிக்கை பதிவு' என்ற, வாசகங்களுடன், கோழி இறைச்சி குறித்த தகவல் வெளியாகி, வேகமாக பரவுகிறது. அதில், பிராய்லர் கோழிகளுக்கு மருந்துகள் செலுத்தி, 45 நாட்களில் முழு வளர்ச்சி அடையச் செய்து, விற்பனைக்காக சந்தைக்கு வந்து விடுகின்றன. இப்போது, அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தி, 20 நாட்களில், சந்தைக்கு வரவழைக்கும் முயற்சியாக, கோழி தீவனத்தில், புதிய மருந்தை செலுத்துகின்றனர்.

இதனால், பல கோழிகளுக்கு, புற்றுநோய் கட்டிகள் உருவாவது தெரிய வந்தது. ஆனால், உற்பத்தியாளர்களும், நோயால் பாதிக்கப்படாத கோழிகளுடன், பத்தோடு பதினொன்றாய் சேர்த்து, இவற்றை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.இவற்றை சாப்பிடுவதால், பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படலாம். எனவே, மூன்று மாதத்திற்கு, கோழி இறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும் என, அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


latest tamil news
ஆதாரமற்ற தகவல்:


இதுகுறித்து சென்னையை சேர்ந்த கோழி இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், 'சமூக வலைதளங்களில், இது போன்ற பல தகவல்கள் பரவுகின்றன. மக்களின் தேவைக்காக, விரைவான பிராய்லர் கோழி உற்பத்தி செய்யப்படுவது உண்மை தான். ஆனால், நோயால் பாதிக்கப்பட்ட இறந்த கோழிகளை, நாங்கள் வாங்குவதில்லை. எங்களை நம்பும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல இறைச்சியை கொடுக்கவே விரும்புகிறோம். மேலும், கார்த்திகை மாதத்தையொட்டி, வழக்கமான வியாபாரத்தில் இருந்து, 70 சதவீதம் விற்பனை குறைந்து விட்டது. இது தான் உண்மை நிலவரம்', என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
23-நவ-201902:09:30 IST Report Abuse
N.K வாட்சப்பில் இதுபோன்ற பீதியை கிளப்பும் சமாச்சாரங்கள் ஏகப்பட்டது கிளம்பும். இருந்தாலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில், சொந்தமாக கோழி வளர்ப்பார்கள், அல்லது கசாப்பு கடைகளில் அன்றண்டைக்கே வெட்டிய கோழிகளை வாங்குவார்கள். கடைகளிலும் தேவையான அளவு கோழிகளை மட்டும் கொன்று மஞ்சள் தடவி வைப்பார்கள். வாரம் ஒருமுறை, இருமுறை மட்டுமே அசைவம் சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில் எல்லாம் சரியாக இருந்தது. இன்று எல்லா வேளையும் அசைவம் கேட்கும் ஆட்கள் அதிகமாகிவிட்டார்கள்,அதுவும், நீண்டநாள் பதப்படுத்தப்பட்ட இரைச்சி உணவுகள் உண்கிறார்கள், அதுவும் கேஎப்சி, போன்ற பெரும் உணவகங்களில் நிலைமை மிக மோசம்.
Rate this:
Cancel
22-நவ-201917:11:21 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) உயிர்களை கொல்வது பெரும் பாவம் . பாவத்தை செய்யாதீர்கள் நல்ல நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது.
Rate this:
Cancel
22-நவ-201917:09:53 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) அசைவம் தவிர்ப்போம் ஆரோக்கியமாய் வாழ்வோம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X