சென்னை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக.,வை தொடர்ந்து திமுக.,வும் அறிவித்துள்ளது.

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு, நவ.,20 அன்று அவசர சட்ட அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையிலும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது. இந்நிலையில், மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்கள் அதற்கான கட்டணத்தை, ரசீதை காட்டி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக நேற்று (நவ.,21) அறிவித்தது. அதிமுக.,வை தொடர்ந்து திமுக.,வும் விருப்பமனு கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என திமுக., தலைமையும் அறிவித்துள்ளது.

திமுக தலைமை இன்று (நவ.,22) காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். நவம்பர் 28 முதல் 30 வரை ரசீதை காட்டி, கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் தவிர கவுன்சிலர்களுக்கு போட்டியிடுவோர், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நவ.,27 வரை விருப்ப மனு அளிக்கலாம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE