இந்த செய்தியை கேட்க
மும்பை : மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவு சிவசேனா கட்சி தலைவர்கள் அவசரமாக, தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத் பவாரின் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தி உள்ளனர்.

சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்., இடைக்கால தலைவர் சோனியாவை டில்லியில் சந்தித்து விட்டு, நேற்று மாலை தான் சரத் பவார் மும்பை திரும்பினார். இந்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோர் நள்ளிரவில் சரத் பவாரின் புறப்பட்டுச் சென்று ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த சந்திப்பின் போது, உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்பது தொடர்பாக உத்தவை, பவார் சமாதானம் செய்தது கூறப்படுகிறது. ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுவதால் மகாராஷ்டிராவிலும் காஷ்மீர் நிலை வந்து விடுமோ என்ற பயத்தில் சிவசேனாவும், காங்.,ம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏறக்குறைய 3 கட்சிகளிடையே பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், இறுதி முடிவு எடுப்பதற்காக நவ.,23 ம் தேதி 3 கட்சிகளும் மீண்டும் கூடி பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சப்பட்ட விவகாரங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்எல்ஏ.,க்களிடமும், மூத்த தலைவர்களிடம் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதே போன்று தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளும் தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களிடம் பேசிய பிறகு இன்று அல்லது நாளை இறுதி முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் 5 ஆண்டுகளுக்கு சிவசேனா தான் முதல்வர் பதவி வகிக்கும் என்று அக்கட்சியின் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE