பொது செய்தி

இந்தியா

பிரதமரின் விமான செலவு ரூ.255 கோடி

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (22)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக தனி விமானத்திற்கு ரூ.255 கோடி செலவிடப்பட்டதாக ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் முரளீதரன் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பிரதமரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணத்திற்கான செலவு குறித்த கேள்விக்கு மத்திய வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் முரளீதரன், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், 2016-17 ம் நிதியாண்டில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கான விமான செலவு ரூ.76.27 கோடியும், 2017-18 ம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 2018-19 ம் நிதியாண்டில் ரூ.79.91 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2019-20 ம் நிதியாண்டிற்கான ரசீது இதுவரை பெறப்படவில்லை.




ஹாட்லைன் வசதிகளுக்காக 2016-17 ல் ரூ.2,24,75,451 ம், 2017-18 ல் ரூ.58,06,630 யும் செலவிடப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான போக்குவரத்தை பொறுத்தவரை, இந்திய அரசு கொள்கையின்படி, விவிஐபி.,க்கள் மற்றும் விஐபி.,க்களுக்கு பயன்படுத்தப்படும் இந்திய விமானப்படையின் விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்களில் பிரதமருக்கு, அரசுமுறை பயணங்களுக்கு கட்டணம் ஏதும் செலுத்தப்படுவதில்லை. விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பிரதமர் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
22-நவ-201915:57:41 IST Report Abuse
Sampathkumar Sampath அம்மா இப்ப என்ன அதுக்கு?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-நவ-201915:25:04 IST Report Abuse
 nicolethomson கெடச்சுருச்சு கெடச்சுருச்சு பஞ்சமி விவகாரத்தில் இருந்து தப்பிக்க கெடச்சுருச்சு என்று கைலி மட்டும் கட்டிய ஒரு வயதானவர் ஓடும் ஸீன் வந்துச்சு
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201914:48:46 IST Report Abuse
ஆப்பு பறந்து பறந்து போய் அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தை வளர்க்கிறார். இவரைத் தவிர்த்து குடியரசு தலைலவர் முதல் எல்லிர்ய்ம் வெளிநாடுகளுக்குப் பறந்து போய் சாதனை புரிகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X